புது டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடப்பு லோக்சபா மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு மறுப்பு இதற்கு மறுப்பு தெரிவித்து இது அரசியலமைப்பு உரிமை அல்ல என்று கூறியது.



கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்டார். இன்று இடைக்கால ஜாமீன் கிடைத்ததையடுத்து அவர் பல வாரங்களுக்கு பிறகு திகார் சிறையை விட்டு அவர் வெளியே வருவார். 


மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜாமீன் கோரியிருந்தார் கெஜ்ரிவால்


ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால், மார்ச் 21 அன்று டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையினரின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், நடப்பு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இடைக்கால ஜாமீன் கோரியும் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 


மேலும் படிக்க | பயங்கர இருட்டு... மைக் இல்லை - வைரலாகும் பிரியங்கா காந்தியின் அதிரடி பிரச்சாரம்!


முன்னதாக மே 7ஆம் தேதி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் விசாரித்து வருகின்றனர். தில்லி முதலமைச்சரின் மனு மீதான விசாரணையை பெஞ்ச் இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளது: முதல் பகுதி ED-ஆல் அவர் கைது செய்யப்பட்டதை கெஜ்ரிவால் எதிர்த்து அதை "சட்டவிரோதம்" என்று அறிவிக்க கோரியது. இரண்டாவது பகுதி தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதில் கவனம் செலுத்துவது. 


இந்த வார தொடக்கத்தில், பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20 வரை டெல்லி நீதிமன்றம் நீட்டித்தது. உச்ச நீதிமன்ற விசாரணையின் போது, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் உத்தியோகபூர்வ பணிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று பெஞ்ச் பரிந்துரைத்தது.


இடைக்கால ஜாமீன் கோரிய கெஜ்ரிவாலின் மனுவை ED எதிர்த்தது


மே 7 அன்று, ஒரு முதலமைச்சரை சாமானியனை விட வித்தியாசமாக நடத்த முடியாது என்று கூறிய ஆம் ஆத்மி தலைவரின் மனுவை ED எதிர்த்தது. ஜாமீன் மனுவுக்கு எதிராக வாதிட்ட ED, இது ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று கூறி, கெஜ்ரிவால் ஒன்பது முறை சம்மன்களைத் தவிர்த்துள்ளதையும் எடுத்துக்காட்டியது.


கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவாலின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடந்து வரும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஆம் ஆத்மி கட்சித் தலைவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறியது. முந்தைய விசாரணையின் போது, நீதிபதிகள் கண்ணா மற்றும் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு தயாராக இருக்குமாறு மத்திய புலனாய்வு அமைப்பிடம் மே 7ஆம் தேதி கேட்டுக் கொண்டது.


இதைத் தொடர்ந்து இன்று, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் படிக்க | திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? மோடியின் பேராசை பலிக்காது - கார்த்தி சிதம்பரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ