மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி! 10% வரை விலை உயரும்! இலவச மின்சாரம் ரத்தாகுமா?
Electricity Subsidy in Delhi: டெல்லியில் மின்சாரக் கட்டணம் உயர்ந்தப்படலாம். மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த மின் விநியோக நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. டெல்லி அரசின் முடிவு என்னவாக இருக்கும் என மக்கள் எதிர்பார்ப்பு.
புதுடெல்லி: தேசிய தலைநகரம் டெல்லியில் மின்சாரக் கட்டணம் அதிகமாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதாவது மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் மின் கொள்முதல் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த மின் விநியோக நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. இது தொடர்பாக மின்சார விநியோக நிறுவனமான பிஎஸ்இஎஸ் டிஇஆர்சியிடம் விண்ணப்பித்திருந்தது. மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுமா இல்லையா என்பது குறித்து அரசாங்கம் இறுதி முடிவு எடுக்கும். டெல்லியில் புதிய மின் கட்டணத்தை தீர்மானிக்கும் பணி நடந்து வருகிறது. பொதுமக்களின் ஆலோசனைக்கு பிறகு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
மின் கட்டண உயர்வுக்கு காரணம் என்ன?
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து, யமுனா பவர் லிமிடெட் (BYPL) ஏற்கனவே உள்ள கட்டணங்களை விட கூடுதலாக 9.42% வசூலிக்க முடியும். ராஜ்தானி பவர் லிமிடெட் (BRPL) கூடுதலாக 6.39% மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (NDMC) கூடுதலாக 2% வசூலிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இது மின் நுகர்வோருக்கு சுமையாக இருக்காது. இந்த கட்டண உயர்வால் நுகர்வோர் நேரடியாக பாதிக்கப்பட மாட்டார்கள் என டெல்லி அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. நிலக்கரி மற்றும் எரிவாயு விலை உயர்வுதான் டெல்லியில் மின் கட்டண உயர்வுக்கு காரணம் என டெல்லி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க - படத்தை மிஞ்சும் கொள்ளை சம்பவம்! திக் திக் வீடியோ!
டெல்லியில் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி
ஆம், டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (DERC) தேசிய தலைநகரில் உள்ள மின் விநியோக நிறுவனங்களுக்கு கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது. எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று பாருங்கள்
BSES யமுனா பவர் லிமிடெட் (BYPL) கட்டணங்கள் 9.42% உயர்த்தப்பட்டுள்ளன
BSES ராஜ்தானி பவர் லிமிடெட் (BRPL) கட்டணங்கள் 6.39% உயர்த்தப்பட்டுள்ளன
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (NDMC) கட்டணங்கள் 2% உயர்த்தப்பட்டுள்ளன
டெல்லியில் மின் கட்டணம் உயருமா?
மின்கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழும் கடந்த ஆண்டிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, மின் நுகர்வோர் மீது சுமையை ஏற்ற டெல்லி அரசு அனுமதி வழங்கவில்லை. அதன் சுமையை மின் விநியோக நிறுவனங்கள் மட்டுமே ஏற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இம்முறையும் அரசுதான் இது குறித்து இறுதி முடிவை எடுக்கும். 2023-24 நிதியாண்டுக்கான புதிய மின் கட்டணங்களை நிர்ணயம் செய்யும் பணியை டெல்லியில் DERC தொடங்கியுள்ளது. புதிய டிஇஆர்சி தலைவர் நியமனத்திற்கு பிறகு இது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெல்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக கிடைக்கிறது. 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோருக்கு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க - 6 இஸ்லாமிய நாடுகளில் குண்டுபோட்டவர் ஒபாமா... அவரை நம்ப முடியுமா - நிர்மலா சீதாராமன்
200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும்:
அதே நேரத்தில், டெல்லியின் மின்சாரத்துறை அமைச்சர் அதிஷி, மின்சார செலவு தொடர்பான நிலைமையை மேலும் தெளிவுபடுத்தினார். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் பயன்படுத்தும் திட்டம் தொடரும் என்றார். இந்த முடிவால் அந்த நுகர்வோர் பாதிக்கப்பட மாட்டார்கள். டெல்லியில் அதிக விலை கொண்ட மின்சாரம் உங்கள் மின் கட்டணத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
டெல்லி மின்சார மானியத்தின் விதி கூறுவது என்ன?
தற்போது, தில்லி அரசு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்த 100 சதவீத மானியம் வழங்குகிறது. ஒரு மாதத்திற்கு 201 முதல் 400 யூனிட்கள் வரை செலவழித்தால், பாதி விகிதத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். டெல்லியில் சுமார் 58 லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர், அவர்களில் 47 லட்சம் பேர் மானியம் பெறுகின்றனர். இவர்களில், 30 லட்சம் பேர், மாதாந்திர பில் பூஜ்ஜியமாக இருக்கிறது.
மேலும் படிக்க - உடலுறவு குறித்து முடிவெடுக்கும் திறன் 16 வயது சிறுமிக்கு உள்ளது: உயர்நீதிமன்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ