6 இஸ்லாமிய நாடுகளில் குண்டுபோட்டவர் ஒபாமா... அவரை நம்ப முடியுமா - நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman: இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் 6 நாடுகளில் சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குண்டுகளை போட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் குற்றச்சாட்டுகளை எப்படி ஏற்க முடியும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 25, 2023, 06:58 PM IST
  • அமெரிக்காவில் பிரதமர் மோடியிடம் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினார்.
  • சிஎன்என் உடனான நேர்காணலில் ஒபாமா பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்தார்.
  • இதற்கு பாஜக தரப்பில் பல கேள்விகள் எழுந்தது.
6 இஸ்லாமிய நாடுகளில் குண்டுபோட்டவர் ஒபாமா... அவரை நம்ப முடியுமா - நிர்மலா சீதாராமன் title=

Nirmala Sitharaman Remarks On Obama: கடந்த சில நாள்களுக்கு முன் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு நிகழ்வுகளிலும், வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்திலும் கலந்துகொண்டார். அதில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மோடியிடம் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன. 

அதில், பத்திரிகையாளர் சப்ரினா சித்திக், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் என்ன நடவடிக்கைகளை எடுக்க நீங்களும் உங்கள் அரசாங்கமும் தயாராக இருக்கிறீர்கள் என பிரதமர் மோடியிடம் கேள்வியெழுப்பியிருந்தார். ஜனநாயகத்தில் இந்தியா புரிந்துள்ள சாதனை மற்றும் மனித உரிமைகளில் தனது அரசாங்கத்தின் செயல்பாடுகளை மோடி வலுவாக ஆதரித்தார். தனது அரசாங்கத்தின் அடிப்படை அடித்தளம் அனைவரின் நம்பிக்கையுடன் கூடிய ஒட்டுமொத்த வளர்ச்சி என பதிலளித்தார். இந்த கேள்வி சர்வதேச அளவில் சற்று சலசலப்பை உண்டாக்கியது. 

அமெரிக்காவில் செய்தியாளர் சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதிலுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.  தேர்தல் தோல்விகளை எதிர்கொண்டு வரும் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் பிரச்சினைகளே இல்லாத, தரவுகள் இல்லாதவற்றை பூதாகரமாக்குவதாக தெரிவித்தார். மேலும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் நிர்மலா சீதாராமன் சாடினார். அதாவது இந்திய முஸ்லீம் குறித்த ஒபாமாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், ஒபாமாவின் ஆட்சி காலத்தில் ஆறு இஸ்லாமிய நாடுகளின் மீது அமெரிக்கா குண்டுவீசியதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். 

மேலும் படிக்க | வெள்ளை மாளிகை விருந்தில் இந்தியப் பிரதமருடன் நீதா முகேஷ் அம்பானி & சுந்தர் பிச்சை

நாட்டின் பிரதமராக மோடிக்கு வழங்கப்பட்ட 13 விருதுகளில், 6 முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளால் வழங்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். "சட்ட ஒழுங்கு குறித்து மாநில அளவில் எழுப்பப்படும் பிரச்சனைகள் உள்ளன. அதை அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். கையில் அடிப்படை தரவுகள் இல்லாமல் வெறும் குற்றச்சாட்டுகளை கூறுவது இவை ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரங்கள் என்று நமக்கு எடுத்துசொல்கிறது.

தேர்தலில் பாஜகவையோ அல்லது பிரதமர் மோடியையோ கடந்த சில தேர்தல்களில் எதிர்க்க முடியாது என்பதால்தான், அவர்கள் இதுபோன்ற பிரச்சாரங்களை நடத்துகிறார்கள். மேலும் இதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு" என நிர்மலா சீதாராமன் கூறினார்.

சிஎன்என் உடனான ஒபாமாவின் நேர்காணலில், இந்திய முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவேன் என்று கூறியதற்கு சீதாராமன் பதிலளித்தார். அதில்,"நான் அதிர்ச்சியடைந்தேன். பிரதமர் மோடி அமெரிக்காவில் பிரச்சாரம் செய்தபோது அமெரிக்க முன்னாள் அதிபர், இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்து பேசுகிறார்.

மற்றொரு நாட்டை உள்ளடக்கியதால் நான் நிதானத்துடன் இதைச் சொல்கிறேன். எங்களுக்கு அமெரிக்காவுடன் நட்பு வேண்டும், ஆனால் அங்கேயும் இந்தியாவில் மத சுதந்திரம் பற்றி கருத்துகளைப் பெறுகிறோம். ஒரு முன்னாள் ஜனாதிபதி - அவரது ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஆறு நாடுகளில் 26,000 க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. அவரது குற்றச்சாட்டுகளை மக்கள் எப்படி நம்புகிறார்கள்?" என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிக் கொள்கைகளுக்கு எதிராக அவர்களால் வெற்றி பெற முடியாது என்று அவர்கள் நினைப்பதால், இந்த நாட்டின் சீரான நிலையை சீர்குலைக்க வேண்டுமென்றே இதுபோன்ற முயற்சியை செய்கிறார்கள் என நான் நினைக்கிறேன் என்று நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

சீதாராமனுக்கு முன், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அவரது மாநில காவல்துறை இந்தியாவில் உள்ள பல 'ஹூசைன் ஒபாமா'-க்களை பாதுகாத்து வருவதாக, ஒபாமா கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | காரை அடித்துச்செல்லும் ஆற்று வெள்ளம்... உள்ளே சிக்கிய பெண் - உறைய வைக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News