புதுடெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் சிறையில் இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஜாமினில் வெளியே வந்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக-வை சரமாரியாக தாக்கினார். பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால், அமித் ஷா பிரதமராக்கப்படுவார் என்றும் அடுத்த இரண்டு மாதங்களில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியிலிருந்து அகற்றப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி தனக்காக வாக்கு சேகரிக்கவில்லை என்றும் அவர் அமித் ஷாவிற்காக இதை செய்கிறார் என்றும் கெஜ்ரிவால் மேலும் கூறினார். அரவிந்த கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முக்கிய விஷயங்களை பற்றி இங்கே காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு மாதங்களில் உத்தர பிரதேச முதல்வர் மாற்றப்படுவார்


அத்வானி ஜி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் ஜி, சிவராஜ் சிங், கட்டார் சாஹேப் போன்ற பல பாஜக தலைவர்களின் அரசியலை நரேந்திர மோடி முடிவுக்கு கொண்டு வந்தார் என்று கெஜ்ரிவால் கூறினார். இப்போது அடுத்த குறி யோகி ஆதித்யநாத் என்று கூறிய அவர், இம்முறை பாஜக தலைமையிலான அரசு தேர்தலில் வெற்றி பெற்றால், இரண்டு மாதங்களில் உத்தரபிரதேச முதல்வர் மாற்றப்படுவார் என்றும் தெரிவித்தார்.


எங்கள் கட்சிக்கு அனுமனின் ஆசீர்வாதம் உள்ளது


டெல்லி பிரதமர் அர்விந்த கெஜ்ரிவால், தங்கள் கட்சிக்கு ஆஞ்சநேயரின் அருள் உள்ளது என்றும், அவர் தங்கள் கட்சியை ஆசீர்வதித்ததால் ஒரு அதிசயம் நடந்தது என்று கூறினார். 'எங்கள் கட்சியை நசுக்க கிடைத்த எந்த வாய்ப்பையும் பிரதமர் விட்டு வைக்கவில்லை. ஒரே ஆண்டில் நான்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை சிறைக்கு அனுப்பினார். ஊழலை எதிர்த்துப் போராட பிரதமர் கற்றுக்கொள்ள விரும்பினால், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பினோம்.' என்றார் அவர்.



மேலும் படிக்க | 50 நாளுக்கு பின் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால்... அவரின் முதல் ரியாக்சன் என்ன தெரியுமா?


எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் 


மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், வங்கதேச முதல்வர் மம்தா பேனர்ஜி, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், உத்தவ் தாக்ரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என்று அவர் எச்சரித்தார். உத்தரப் பிரதேச முதல்வரும் மாற்றப்படுவார் என்றார் அவர். "நாட்டில் எப்பொழுதெல்லாம் 'சர்வாதிகாரம்' தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் மக்கள் அதைத் தூக்கி எறிய வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார். 


இந்தியாவைக் காப்பாற்ற அயராது உழைப்பேன்


சர்வாதிகாரத்தை ஒழித்து இந்தியாவைக் காப்பாற்ற அயராது பாடுபடுவேன், நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வேன் என்று அர்விந்த கெஜ்ரிவால் சூளுரைத்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும், தேர்தல் நிபுணர்கள் மற்றும் மக்களிடம் பேசியதாகவும், ஜூன் 4க்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்பதை உணர்வதாகவும் கூறிய அர்விந்த கெஜ்ரிவால், எதிர்க்கட்சி கூட்டணியான 'இந்தியா' கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், ஆம் ஆத்மி கட்சி, மத்தியில் ஆட்சியில் அங்கம் வகிக்கும் என்றும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்... தொகுதிகள்... முக்கிய வேட்பாளர்கள்... பிற விபரங்கள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ