Arvind Kejriwal News: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை புகாரை அடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுபான கலால் கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகத்தின் ஐந்து நோட்டீஸ்களை ஆம் ஆத்மி தலைவர் புறக்கணித்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிப்ரவரி 17 அன்று டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.


அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்


புதிய மதுபானக் கலால் கொள்கை தொடர்பான பணமோசடி குற்றசாற்று வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பிய 5 சம்மன்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான  அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை ஆஜராகவில்லை. இதையடுத்து, அமலாக்கத் துறை நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கு இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மேலும் படிக்க - என் மீது பொய் வழக்கு! லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்ய விடாமல் முடக்க முயற்சி -கெஜ்ரிவால்


அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எப்பொழுது சம்மன் அனுப்பப்பட்டது


முதல் சம்மன் - நவம்பர் 2, 2023,


இரண்டாவது சம்மன் - டிசம்பர் 21, 2023,


மூன்றாவது சம்மன் - ஜனவரி 3, 2024,


நான்காவது சம்மன் - ஜனவரி 18, 2024,


ஐந்தாவது சம்மன் - பிப்ரவரி 2, 2024.


இந்த சம்மன் சட்டவிரோதமானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிவந்தார்.


புதிய மதுபானக் கலால் கொள்கை ஊழல் குற்றசாட்டு


டெல்லி அரசு கொண்டுவந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான புதிய மதுபானக் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகவும், மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்குவதற்காக சில தொழிலதிபர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த புதிய மதுபானக் கொள்கையால் அரசு கருவூலத்துக்கு ரூ.144.36 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது எனக்கூறிய டெல்லி லெப்டினன்ட் கவர்னரின் பரிந்துரையின் பேரில் சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது மற்றும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து மறுத்து வருகிறது. 


கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா


புதிய மதுபானக் கலால் கொள்கையில் முறைகேடு வழக்கில் டெல்லி அரசின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார். அதன்பிறகு பிப்ரவரி 26 அன்று சிபிஐயால் அவர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மார்ச் 9 ஆம் தேதி, கலால் கொள்கை பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. இன்னும் அவர் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க - ஆம் ஆத்மி கட்சியை ஒழிக்க பிரதமர் மோடி விரும்புகிறார் -அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ