புதுடெல்லி: டெல்லியின் முதல் மந்திரியுமான, ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மைத்துனர் மீது ஓர் அரசு சாரா டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்த அந்த புகாரில் கெஜ்ரிவாலின் உறவினரான சுரேந்தர் குமார் பன்சால், பொதுப்பணித்துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த பணியில் பெரிய அளவில் லாபம் பெறுவதற்காக பில்கள் மற்றும் பொருள் விவரப்பட்டியலை போலியாக சமர்பித்ததாக குற்றம் சாட்டியிருந்தது. 


இந்த புகாரின் அடிப்படையில் சுரேந்தர் குமார் பன்சாலிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், புகார்தாரரிடம் ஆவணங்களோடு வருமாறும் அப்போதும் விசாரணையை மேற்கொண்டு நடத்த முடியும் தெரிவித்தனர். 


கெஜ்ரிவாலின் மைத்துனரான பன்சால், நகராட்சியிடம் இருந்து வடிகால் அமைக்கும் பணியை மேற்கொள்வதாக ஒப்பந்தம் பெற்று பணியை மேற்கொண்டு இருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை சனிக்கிழமை அன்று கோர்ட்டில் அரசு சாரா மேற்கொண்டு இருந்தது.