சுதந்திர தினத்தை தவறாமல் கொண்டாடி வந்த பிரணாப் முகர்ஜீ: மகள் ஷர்மிஷ்டா முகர்ஜீ
திரு.பிரணாப் முகர்ஜீயின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவரது மகள் ஷ்ர்மிஷ்டா முகர்ஜீ சுதந்திர தினத்தை கொண்டாடும் அவரது பழைய படங்களை தனது டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.
தலைநகர் தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜீயில் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
அவர் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து கொண்டிருக்கிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், அவரது மகள், ஷர்மிஷ்டா முகர்ஜீ, தனது தந்தை பிரணாப் முகர்ஜீ அவர்கள் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட பழைய படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில அவர், பிரணாப் முகர்ஜீ அவர்கள் சிறுவயதில் இருந்தே, தனது தந்தை மற்றும் மாமாவுடன் தனது சொந்த கிராமத்தில் உள்ள தனது பூர்வீக இல்லத்தில், கொடி ஏற்றுவார்கள் என்றும், அப்போதிலிருந்து அவர் சுதந்திர தினத்தன்று ஒரு வருடம் கூட மூவர்ண கொடியேற்றி கொண்டாட தவறியதில்லை எனவும் அவர் அந்த நினைவுகளை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார். அடுத்த வருடம், தனது தந்தை அதே போன்று சுதந்திர தினத்தில் மூவர்ண கொடி ஏற்றுவார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தாலும், அவரது உடல் நிலை மேலும் மோசமடையவில்லை என்பதோடு,வெளிச்சத்தை பார்க்கும் போது, அவரது கண்களில் அசைவு தெரிந்ததால், நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.
தனது தந்தையின் உடல் நிலை குறித்து வதந்திகள் பரவியதாக குறிப்பிட்டார்.