சுதந்திர தின வரலாற்றில் முதல் முறையாக நயாகரா நீர்வீழ்ச்சியில் மூவர்ண கொடி பறக்கும்..!!!

சுதந்திர தினம் 2020: உலகப் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியில் கொடி ஏற்றும் விழா ஆகஸ்ட் 15 மாலை நடைபெறும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 14, 2020, 02:47 PM IST
  • கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில், வரலாற்றில் முதல் முறையாக இந்திய சுதந்திர தினத்தில் மூவர்ண கொடி பறக்கும்.
  • அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த மக்கள் அடங்கிய குழு ஆகஸ்ட் 15 ஆம் தேதி டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும்.
  • இதன் மூலம் வரலாறு படைக்கப்படும் என இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர தின வரலாற்றில் முதல் முறையாக நயாகரா நீர்வீழ்ச்சியில் மூவர்ண கொடி பறக்கும்..!!! title=

நாளை சுதந்திர தினம். பல போராட்டங்கள் உயிர் தியாகங்களுக்கு பிறகு பல ஆண்டுகளாக அடிமை சங்கிலியால் கட்டப்பட்டிருந்த இந்தியா, அதை உடைத்தெறிந்த நாள். 

74 வது இந்திய சுதந்திர தினத்தை நாளைக் கொண்டாட தேசம் தயாராகி வருகிறது. வரலாற்றில் முதன் முறையாக கனடாவிலும் இந்த ஆண்டு கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் முறையாக கனடாவின் சின்னமாக விளங்கும் நயாகரா நீர்வீழ்ச்சியில் இந்திய மூவர்ண கொடி  ஏற்றப்படும். 

உலக புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியில் கொடி ஏற்றும் விழா ஆகஸ்ட் 15 மாலை நடைபெறும்.

நயாகரா நீர்வீழ்ச்சியைத் தவிர, கனடாவின் டொராண்டோவில் உள்ள 553 மீட்டர் உயரமுள்ள சி.என் டவர்,  உட்பட, கனடாவின் பிற முக்கிய இடங்களிலும்  ஞாயிற்றுக்கிழமை மூவர்ண கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

டொராண்டோவிற்கான இந்தியாவின் துணைத் தூதர் அபூர்வா ஸ்ரீவாஸ்தவா, இந்த சுதந்திர தினத்தில்,  நயாகரா நீர்வீழ்ச்சி, சிஎன் டவர் மற்றும் டொராண்டோ சைன் போன்ற முக்கியமான இடங்களில், இந்திய மூவர்ண கொடி பறக்க உள்ள என்பது பெருமைக்குரிய விஷயம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் படிக்க| சுதந்திர தினம் 2020: மூவர்ண கொடி தொடர்பான அரிய தகவல்கள்

இருப்பினும், இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஆன்லைன் மூலம் பங்கேற்பு நடைபெறும்.

அமெரிக்காவில் உள்ள  புலம்பெயர்ந்த மக்கள் அடங்கிய குழு ஆகஸ்ட் 15 ஆம் தேதி டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும்.  வரலாற்றில் முதல் முறையாக இந்திய மூவர்ண கொடியானது, நியூயார்க் நகரத்தின் முக்கிய இடங்களில் ஏற்றி வைக்கப்படும்.

நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட  ஒரு அறிக்கையில், ஆகஸ்ட் 15, 2020 அன்று, இந்தியாவின் சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், டைம்ஸ் சதுக்கத்தில் முதல் கொடி ஏற்றும் விழாவை நடத்துவதன் மூலம் வரலாறு படைக்கப்படும் என்று கூறியுள்ளது.

ALSO READ | வீட்டில் இருந்தே ஆபீஸ் வேலை பார்ப்பவரா நீங்க.. வரி விதிப்பு அதிகமாகலாம் கவனமா இருங்க..!!!

Trending News