டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி, நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முகலாயர்கள் மற்றும் முஸ்லிம்களை மத்திய அரசு குற்றம் சாட்டுவதாகக் குறிப்பிட்டார். "நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. டீசல் லிட்டருக்கு  ரூ.102-க்கு விற்கப்படுகிறது. உண்மையில் இதற்கெல்லாம் பொறுப்பு அவுரங்கசீப் தான். பிரதமர் நரேந்திர மோடி அல்ல.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு அக்பர் பொறுப்பு. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.115-க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்வுக்கு ஷாஜகானே பொறுப்பு. அவர் தாஜ்மஹாலைக் கட்டவில்லை என்றால், இன்று பெட்ரோல் ரூ.40-க்கு விற்கப்படும். தாஜ்மஹாலையும், செங்கோட்டையையும் கட்டி ஷாஜகான் தவறிழைத்து விட்டார். அந்த பணத்தை அவர் சேமித்து வைத்திருந்து, 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். 


மேலும் படிக்க | Income Tax Raid: காங்கிரஸ் தலைவர் வீட்டில் ரெய்ட்: பல இடங்களில் வருமான வரி சோதனை


இந்திய முஸ்லீம்களுக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜின்னாவின் முன்மொழிவை நாங்கள் நிராகரித்தோம். இந்த ஆண்டு சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடுவோம். ஜின்னாவின் முன்மொழிவை நிராகரித்து இந்தியாவில் தங்கியதற்கு சாட்சியாக இன்று நாட்டில்  20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர்.


"இந்தியா எங்கள் அன்புக்குரிய நாடு. நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டோம். நீங்கள் எவ்வளவு முழக்கங்களை எழுப்பினாலும், எங்களை வெளியேறச் சொன்னாலும் நாங்கள் இங்கேதான் வாழ்வோம், இங்கேயே சாவோம்" என்று ஒவைசி கூறினார்.


மேலும் படிக்க | ஆந்திரா: பிரதமர் சென்ற ஹெலிகாப்டர் அருகே பறந்த பலூன்களால் பரபரப்பு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR