ஆந்திரா: பிரதமர் சென்ற ஹெலிகாப்டர் அருகே பறந்த பலூன்களால் பரபரப்பு

ஆந்திரப்பிரதேசத்திற்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன்கள் பறந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Jul 5, 2022, 03:32 PM IST
  • ஆந்திராவுக்கு பிரதமர் மோடி இன்று வருகை
  • எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் போராட்டம்
ஆந்திரா: பிரதமர் சென்ற ஹெலிகாப்டர் அருகே பறந்த பலூன்களால் பரபரப்பு title=

சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஆந்திரப்பிரதேசத்திற்கு பிரதமர் மோடி இன்று வருகை தந்தார். பீமாவரத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜூவின் சிலையை அவர் திறந்து வைத்தார். 

முன்னதாக ஆந்திராவுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. சிலை திறப்பு விழா முடிந்த பிறகு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். 

அவரது ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் 50-க்கும் மேற்பட்ட கருப்பு பலூன்களை காங்கிரஸார் பறக்கவிட்டனர். இவை வானில் பிரதமர் சென்ற ஹெலிகாப்டருக்கு மிக அருகாமையில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்க | OTP நம்பரை சொல்ல இவ்ளோ லேட்டா? - ஆத்திரத்தில் ஐடி ஊழியரை கொன்ற ஓலா ஓட்டுநர்!

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் சென்ற ஹெலிகாப்டருக்கு அருகே பறந்த பலூன்களால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். 

இந்த நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆந்திர போலீசார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி புறப்பட்டு சென்ற 5 நிமிடங்களுக்கு பின்னரே பலூன்கள் பறக்க விடப்பட்டன என்பதால் பாதுகாப்பு விதிமீறல்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் போலீஸார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | 'நீதிமன்ற தீர்ப்பு பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி' - அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News