Assembly Election 2022: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் ஒத்திப்போடப்பட்டது
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் ஒத்திப்போடப்பட்டது. இதை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
புதுடெல்லி: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் ஒத்திப்போடப்பட்டது. இதை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஐந்து மாநிலங்களையும் இணைத்து மொத்தம் 7 கட்டங்களில் தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டிருந்தது.
நாட்டின் 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மாநிலத்தில் தேர்தலை ஒத்திப்போட வேண்டும் என்ற பல்வேறு கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் (Election Commission) தேர்தலை ஒத்திப்போட்டது.
பொதுவாக, குரு ரவிதாஸ் ஜெயந்தியன்று, சீக்கியர்களும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்களும், வாரணாசிக்கு புனித யாத்திரை மேற்கொள்வார்கள்.
பிப்ரவரி 16ம் தேதியன்று குரு ரவிதாஸ் ஜெயந்தியை ஒட்டி, பஞ்சாப் மக்கள் புனிதப்பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கும். உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் பிப்ரவரி 14 ஆம் தேதியும், மணிப்பூரில் பிப்ரவரி 27 ஆம் தேதி மற்றும் மார்ச் 3 ஆம் தேதியும் வாக்குப்பதிவு (Election vote casting) நடைபெறும்.மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இரண்டாம் கட்டத்தில் பிப்ரவரி 14ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல் பஞ்சாப் மாநிலத்தில் ஒத்திப்போடப்பட்டிருப்பதால், தற்போது அது பிப்ரவரி 20ம் தேதியன்று மூன்றாம் கட்டத்தில் நடைபெறும்.
ALSO READ | 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தது தேர்தல் ஆணையம்
உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள்
கட்டம் 1: பிப்ரவரி 10
கட்டம் 2: பிப்ரவரி 14 ( உத்தரகாண்ட், கோவா)
கட்டம் 3: பிப்ரவரி 20 (பஞ்சாப்)
கட்டம் 4: பிப்ரவரி 23
கட்டம் 5: பிப்ரவரி 27 (மணிப்பூர்)
கட்டம் 6: மார்ச் 3 (மணிப்பூர்)
கட்டம் 7: மார்ச் 7
வாக்கு எண்ணிக்கை: மார்ச் 10
ALSO READ | பிரதமர் மோடி மீண்டும் பஞ்சாப் வருவார் என்று எதிர்பார்க்கும் பஞ்சாப் முதலமைச்சர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR