புதுடெல்லி: நாட்டின் 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஐந்து மாநிலங்களையும் இணைத்து மொத்தம் 7 கட்டங்களில் தேர்தல்கள் நடத்தப்படும்.
உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கும். பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் பிப்ரவரி 14 ஆம் தேதியும், மணிப்பூரில் பிப்ரவரி 27 ஆம் தேதி மற்றும் மார்ச் 3 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள்
கட்டம் 1: பிப்ரவரி 10
கட்டம் 2: பிப்ரவரி 14 (பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா)
கட்டம் 3: பிப்ரவரி 20
கட்டம் 4: பிப்ரவரி 23
கட்டம் 5: பிப்ரவரி 27 (மணிப்பூர்)
கட்டம் 6: மார்ச் 3 (மணிப்பூர்)
கட்டம் 7: மார்ச் 7
Uttar Pradesh to go to poll in 7 phases from 10th Feb to 7th March; Punjab, Uttarakhand and Goa to vote on 14th February & Manipur to vote on 27th Feb & 3 March; Counting of votes on 10th March: ECI pic.twitter.com/hxKms5e8hi
— ANI (@ANI) January 8, 2022
உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளிலும், பஞ்சாபில் 117 தொகுதிகளிலும், மணிப்பூரில் 60 தொகுதிகளிலும், உத்தராகண்டில் 70 தொகுதிகளிலும், கோவாவில் 40 தொகுதிகளிலும் தேர்தல்கள் நடக்கவுள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் நடக்கவுள்ளதால், புதிய வழிமுறைகள் கடைபிடிக்கப்படும் என தலைமை தேர்தல் அணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார். இந்த முறை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வாக்களிக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பெண்களுக்கென பிரத்யேகமாக ஒரு வாக்குச்சாவடியாவது கட்டாயம் இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ள 5 மாநிலங்களில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் 24.9 லட்சம் பேர் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார். ஐந்து மாநிலங்களில் நடக்கவுள்ள இந்த சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் பங்கேற்பார்கள், இவர்களில் 8.55 கோடி பேர் பெண் வாக்காளர்கள்.
அனைத்து தேர்தல் அதிகாரிகளும் ஊழியர்களும் முன்னணி பணியாளர்களாக கருதப்படுவார்கள். தகுதியான அனைத்து அதிகாரிகளுக்கும் 'முன்னெச்சரிக்கை டோஸ்' தடுப்பூசி போடப்படும் என CEC சுஷில் சந்திரா தெரிவித்தார்.
ஐந்து மாநிலங்களிலும் ஜனவரி 15 ஆம் தேதி வரை, பிரச்சாரக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான சவால் உள்ளது
பஞ்சாப் பற்றி பேசினால், இங்கு தேர்தலை நடத்துவதுடன், தேர்தல் ஆணையத்தின் முன் பாதுகாப்பும் ஒரு பெரிய சவாலாக உள்ளது. பஞ்சாபில் பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதாக உளவுத்துறை அமைப்புகள் உள்ளீடுகளை வழங்கியுள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேர்தலை நடத்துவது சவாலாக இருக்கும்
கொரோனா வைரஸ் தொற்று பிரச்சினையும் தேர்தல் ஆணையத்தின் முன் உள்ளது. தேர்தல் பேரணிகளை அனுமதிப்பது தொற்று பரவலுக்கு வழி வகுக்கலாம்.
பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி (AAP), சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற கட்சிகள் தேர்தலில் தங்கள் முத்திரையைப் பதிக்க விரும்பினாலும், கோவிட்-19 தான் இந்த தேர்தல்களின் முக்கிய பேசுப்பொருளாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
ALSO READ | பிரதமர் மோடி மீண்டும் பஞ்சாப் வருவார் என்று எதிர்பார்க்கும் பஞ்சாப் முதலமைச்சர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR