சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2023: ஆட்சிக்கு வரப்போவது யார்? மாநில வாரியாக முடிவுகள்!
Assembly Election Results 2023: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.
Assembly Election Results 2023: மிசோரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் 2023 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நவம்பர் 30 ஆம் தேதி முடிவடைந்தது. மிசோரமில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதியில் இருந்து 4ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்களுக்கு விசேஷ நாள் என்பதால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கு மாநிலங்களுக்கான வாக்குகள் இன்று டிசம்பர் 3ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. மிசோரமின் 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 7-ஆம் தேதி நடைபெற்றது. சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நவம்பர் 17-ஆம் தேதி நடைபெற்றது. ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தெலுங்கானாவில் 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேலும் படிக்க | Rajasthan Election Results 2023: காங்கிரஸ் வென்றால்... முதல்வர் பதவி யாருக்கு?
தெலுங்கானா
தெலுங்கானாவில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3,17,32,727 ஆகும். பாரத் ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) சந்திரசேகர் ராவ் 2014 முதல் தெலுங்கானா முதலமைச்சராக இருந்து வருகிறார். 2018 தெலுங்கானா சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார். கே.சந்திரசேகர் ராவ் (பிஆர்எஸ்), அனுமுலா ரேவந்த் ரெட்டி (காங்கிரஸ்), எடெலா ராஜேந்தர் (பாஜக), அக்பருதீன் ஓவைசி (ஏஐஎம்ஐஎம்), கோமதிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி (காங்கிரஸ்), கே.டி.ராமராவ் (பிஆர்எஸ்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,61,36,229 ஆகும். பாரதிய ஜனதா கட்சியின் சிவராஜ் சிங் சவுகான் 2020 முதல் முதல்வராக உள்ளார். அவர் 2005 முதல் 2008 வரை, 2008 முதல் 2013 வரை மற்றும் 2013 முதல் 2018 வரை அந்த மாநில முதல்வராக இருந்தார். சிவராஜ் சிங் சவுகான் (பாஜக), கமல்நாத் (காங்கிரஸ்), அஜய் அர்ஜுன் சிங் (காங்கிரஸ்), ஜெய்வர்தன் சிங் (காங்கிரஸ்), கைலாஷ் விஜயவர்கியா (பாஜக), நரேந்திர சிங் தோமர் (பாஜக), ஃபக்கன் சிங் குலாஸ்தே (பாஜக) ஆகியோர் மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
ராஜஸ்தான்
ராஜஸ்தானில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,26,80,545 ஆகும். 2018 முதல் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி உள்ளது. அவர் 1998 முதல் 2003 வரையிலும், 2008 முதல் 2013 வரையிலும் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். அசோக் கெலாட் (காங்கிரஸ்), வசுந்தரா ராஜே சிந்தியா (பாஜக), சச்சின் பைலட் (காங்கிரஸ்), ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (பாஜக), பாபா பாலக்நாத் யோகி (பாஜக), ராஜேந்திர சிங் ரத்தோர் (பாஜக), ஹனுமான் பெனிவால் (ஆர்எல்பி) ஆகியோர் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள்.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,03,80,079 ஆகும். அங்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் 2018 முதல் ஆட்சி செய்து வருகிறார். 2003 முதல் 2018 வரை பாஜகவின் ராமன் சிங் முதல்வராக இருந்தார். பூபேஷ் பாகேல் (காங்கிரஸ்), ராமன் சிங் (பாஜக), விஜய் பாகேல் (பாஜக), கோமதி சாய் (பாஜக), அருண் சாவோ (பாஜக), தாம்ரத்வாஜ் சாஹு (காங்கிரஸ்), சரண் தாஸ் மஹந்த் (காங்கிரஸ்), ஆகியோர் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ