2022 சட்டமன்றத் தேர்தல்கள்: உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேசிய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல கட்டங்களில் நடக்கவுள்ள இந்த சட்டமன்ற தேர்தல்களில் தங்கள் நிலையை வலுப்படுத்திக்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை செவ்வாயன்று பஞ்சாபில் வெளியிட்டது. பஞ்சாப் மாநிலத்தில் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதுடன், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (எம்.எஸ்.பி) உத்தரவாதத்தையும் கட்சி அளித்துள்ளது. 


உத்தரபிரதேசத்தில், லவ் ஜிகாத் வழக்குகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அக்கட்சியின் அறிக்கையான 'லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா'-ல் கூறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதாகவும், கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்வதை பா.ஜ.க பலப்படுத்தும் என்றும் அறிக்கை உறுதியளிக்கிறது. 


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ராணி லக்ஷ்மி பாய் யோஜனா திட்டத்தின் கீழ், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டிகள் வழங்கபடும் என்றும் உறுதியளிக்கப்படுள்ளது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பொது போக்குவரத்து வசதி வழங்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | "மாநிலங்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்துள்ளன": மக்களவையில் பிரதமர் மோடி 


பிரதமரின் உஜ்வலா யோஜனா திட்டத்தின் கீழ், தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையின் போது, ​​கட்சி இரண்டு இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்கும் என்றும் அறிக்கையில் கூறபட்டுள்ளது. 


கோவாவில், பாஜக ஆட்சிக்கு வந்தால், தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில், கோவாவை கூட்டுறவுத் தளமாகவும், தொலைதூரத்தில் இருந்து பணியாற்றுவதற்கான இடமாகவும் (ரிமோட் வொர்கிங்க் டெஸ்டினேஷன்) மாற்றுவதாக கட்சி உறுதியளித்துள்ளது. கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், மாநிலத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஓராண்டில் மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கூறினார்.


இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வரும், டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சிக்காக வாக்கு சேகரித்தார். அவர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். உத்திரபிரதேச மக்களை எஸ்பிக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்திய மம்தா பேனர்ஜி, ஹத்ராஸ் மற்றும் உன்னாவ் சம்பவங்களுக்கு காரணமானவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்றார். உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும், பிறகு வாக்கு கேட்க வேண்டும் என்று அவர் ஆவேசமாகப் பேசினார். 


மேலும் படிக்க | ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை - தீவிரமடையும் போராட்டங்கள்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR