மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை ஒருமுறை நிராகரித்த மாநிலங்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஏற்கவில்லை என்று சாடினார். தமிழ்நாடு, தெலுங்கானா, ஜார்க்கண்ட், பீகார் போன்ற மாநிலங்கள் காங்கிரஸை நிராகரித்த நிலையில், இதுவரை காங்கிரஸுக்கு வாக்களிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி தனது உரையில், "24 ஆண்டுகளுக்கு முன்பு நாகாலாந்து காங்கிரஸுக்கு வாக்களித்தது, ஒடிசா 27 ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கு வாக்களித்தது. 28 ஆண்டுகளுக்கு முன்பு கோவாவில் முழுப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றீர்கள்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். "1988ல் திரிபுரா காங்கிரசுக்கு வாக்களித்தது. 1972ல் மேற்கு வங்காளம் காங்கிரசுக்கு வாக்களித்தது. தெலுங்கானாவை உருவாக்கியதற்காக நீங்கள் பெருமை கொள்கிறீர்கள் ஆனால் பொதுமக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை" என்று பிரதமர் மோடி (PM Narendra Modi) மேலும் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளும், நடவடிக்கைகளும், வரும் 100 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர வேண்டாம் என முடிவு செய்துள்ளதையே உணர்த்துகின்றன என்றார்.
"நாங்கள் ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள். விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கம் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஆனால், எல்லாவற்றிற்கும் கண்மூடித்தனமான எதிர்ப்பு ஒருபோதும் முன்னேற்றத்தை கொடுக்காது" என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் மோடி கூறினார்.
#WATCH PM Modi targets Congress in Parliament says, no change in your ego even after being voted out from many states years ago pic.twitter.com/19MKblziYi
— ANI (@ANI) February 7, 2022
ALSO READ | உலகின் புகழ் பெற்ற தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்!
முதல் கோவிட் அலையின் போது பீதியை உருவாக்கி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை பிரதமர் சாடினார். முதல் அலையின் போது, மக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு லாக்டவும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் போது, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது காங்கிரஸ் என்றார்.
தொற்றுநோயை இந்தியா கையாண்ட விதம் உலகத்திற்கே உதாரணம் என்று பிரதமர் கூறினார்.
மேலும், 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்பது வரும் ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு உலகளாவிய தலைமையை வகிக்க முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க சரியான நேரம் என்பதையே உணர்த்துகிறது என்றார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR