ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இதையடுத்து, மரங்கள், தாவரங்கள், கட்டடங்கள் என அனைத்திலும் பனி படர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் பந்திப்போரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே கடும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் மாயமாகியுள்ளனர். அவர்கள் பனிக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களைத் தீவிரமாக தேடும் பணியில் மற்ற வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.