14:05 18-09-2019
அயோத்தி விவகாரத்தில் இரு தரப்பினரும் மத்தியஸ்தம் மூலம் சர்ச்சையைத் தீர்க்க முயற்சிக்க விரும்பினால் செய்துக்கொள்ளலாம். ஆனால் அயோத்தி வழக்கு விசாரணை நிறுத்தப்படாது. அக்டோபர் 18க்குள், இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் குறித்து ஏதாவது பேச்சுவாரத்தை நடத்தப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். மத்தியஸ்தம் அறிக்கை ரகசியமாக தான் இருக்கும் என உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லி: அயோத்தி வழக்கின் 26வது நாள் விசாரணை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு இன்றும் நடைபெற்றது. அப்பொழுது முஸ்லிம் கட்சிகள் தங்களது வாதங்களை முடிக்க நடப்பு மற்றும் அடுத்த வாரம் ஆகும் என்று முஸ்லிம் கட்சியின் வழக்கறிஞர் ராஜீவ் தவான் தெரிவித்தார். தங்கள் வாதங்கள் முடிக்க 2 நாட்கள் ஆகும் என்று இந்து கட்சிகள் கூறின. அதன் பிறகு வாதங்கள் மீது பரிசீலனை செய்ய தாங்களும் 2 நாட்கள் எடுப்போம் என்று தவான் கூறினார். இதனையடுத்து உச்சநீதிமன்றம், நீங்கள் வழங்கிய கால எல்லையின்படி, அக்டோபர் 18க்குள், அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என கூறியது. அதாவது, நவம்பர் 17 ஆம் தேதி தலைமை நீதிபதி (CJI) ரஞ்சன் கோகோய் ஓய்வு பெறுவதற்கு முன்பு, உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கில் தனது தீர்ப்பை வழங்க ஒரு மாத கால அவகாசம் கிடைக்கும்.


நேற்று (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றம் அனைத்து தரப்பினரின் ஆலோசனையையும் வாதத்தை முடிக்க கால அவகாசத்தைக் குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டது. இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அயோத்தி வழக்கின் போது, தலைமை நீதிபதி அனைத்து தரப்பினரிடமும் தங்கள் வாதங்களை முடிக்க எவ்வளவு காலம் தேவை என்று கேட்டார். அனைத்து தரப்பினரும் தங்களுக்கான கால அவகாசத்தை குறித்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை நிறைவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 


ஒருவேளை அயோத்தி வழக்கின் அனைத்து வாதங்களும் அக்டோபர் மாதத்தில் முடிந்தால், நவம்பர் மாதத்தில் அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும் நவம்பர் மாதத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெறப்போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.