அயோத்தி ஸ்ரீராமரை தரிசிக்க... நேரம் & முன்பதிவு விபரங்கள்!
அயோத்தியில் ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இந்த மாபெரும் விழாவில், அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்க குழந்தை ராமருக்கு மலர்கள், பழங்கள் சமர்ப்பித்து, பிரதமர் நரேந்திர மோடி ராமருக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார்.
அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு இன்று கோலாகலமாக நடந்தேறியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது. விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் அயோத்தி வந்துள்ளனர். கிட்டத்தட்ட 8,000 விருந்தினர்கள் பங்கேற்றனர். இதற்கிடையில், பிரான் பிரதிஷ்டை விழாவைக் குறிக்கும் வகையில் மத்தியை அரசும், பல மாநில அரசுகளும் அரை நாள் விடுமுறை அறிவித்தன.
குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வில், அர்ச்சகர்களின் வழிகாட்டுதலின் படி பிரதமர் மோடி, மோகன் பகவத், ஆனந்திபென் படேல், யோகி ஆதித்யாநாத் ஆகியார் பூஜைகளை செய்தனர். கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்க குழந்தை ராமருக்கு மலர்கள், பழங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி ராமருக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார்.
ஆரத்தி காண்பிக்கப்பட்டதை அடுத்து, ஆலயத்தில் இருந்த ஆன்மிகப் பெரியவர்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். அப்போது அவர்களுக்கு புத்தாடையும், மோதிரமும் பிரதமர் மோடி பரிசளித்தார். குழந்தை ராமரை (Ayodhya Ramar Temple) தரிசித்த பிரதமர் மோடி உள்ளிட்டோர் நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஸ்ரீராமர் கோயில் ஆரத்தி நேரம்:
காலை / சிருங்கார ஆரத்தி - காலை 6:30 மணி
மதிய நேர போக் ஆரத்தி - மதியம் 12 மணி
சந்தியா ஆரத்தி - இரவு 7:30 மணி
ஸ்ரீராமர் கோயில் தரிசன நேரங்கள்:
ராமர் கோயிலில் காலை 7 மணி முதல் 11:30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் கோயில் தரிசனம் செய்யலாம்.
மேலும் படிக்க | அயோத்தி வந்தார் குழந்தை ஸ்ரீராமர்... 1528 முதல் 2024 வரை... கடந்து வந்த பாதை..!!
ஆரத்தி/தரிசனத்திற்கு முன்பதிவு செய்வது எப்படி?
பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தரிசனத்த்திற்கு அல்லது ஆரத்திக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைக. பதிவு செய்வதற்கான OTP ஐப் பெறுவீர்கள்.
'My Profile' என்பதற்குச் சென்று, ஆர்த்தி அல்லது தரிசனத்திற்கு விரும்பிய நேரத்தில் முன்பதிவு செய்யவும்.
உங்கள் அடையாள சான்றிதழ்களை கொடுத்து, உங்கள் பாஸை பதிவு செய்யவும்.
வளாகத்திற்குள் நுழைவதற்கு முன், கோவில் கவுண்டரில் இருந்து உங்களின் பாஸைப் பெற வேண்டும்.
ஆன்லைன் முன்பதிவு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பின்தொடரவும்.
ஸ்லாட்டுகள் கிடைப்பதன் அடிப்படையில் ஆஃப்லைனில் ஒரே நாளில் முன்பதிவு செய்யப்படும். ஆரத்திக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக பக்தர்கள் கோவில் வளாகத்தில் இருக்க வேண்டும்.
கோவில் நுழைதற்கான அனுமதி:
ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, பக்தர்கள் தங்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று முன்பு கூறியிருந்தது.
மேலும் படிக்க - தமிழக கோவில்களில் அடக்குமுறையா? ஆளுநர் ரவி, நிர்மலா சீதாரமன் சொல்வது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ