பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ. 1,408.49 கோடி நிகர லாபமாக ஈட்டி 19.82 சதவீதம் உயர்வினை பதிவு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 1,175.47 கோடி என தெரிவித்துள்ளது.


மேலும் இந்த காலண்டில் நிறுவனத்தால் உட்படுத்தப்பட்ட மதிப்பீடு 6,788.43 கோடி ரூபாயாகவும், ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ. 7,395.19 கோடியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


நான்காம் காலாண்டில், நிறுவனத்தின் மொத்த விற்பனை 11,93,590 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 10,45,378 கார்களை விற்பனை செய்திருந்தததாகவும் பஜாஜ் தெரிவித்துள்ளது. இது 14 சதவீதம் வளர்ச்சி விகிதம் ஆகும்.


2019-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ரூ. 4,927.61 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இது ரூ. 4,218.95 கோடியாக இருந்தது. இது 16.79 சதவீத வளர்ச்சியாகும்.


முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் ரூ. 30,249.96 கோடியாக இருந்தது. குறிப்பிட்ட நிதியாண்டில் நிறுவனம் உட்படுத்திய பொருட்களின் மதிப்பீடு 25,617.27 கோடி ரூபாயாக குறிக்கப்பட்டுள்ளது.


FY2018-19 இல் மொத்த விற்பனை 40,06,791 யூனிட்டுகளுக்கு 50,19,503 யூனிட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 25 சதவீதம் அதிகரிப்பினை குறிக்கின்றது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் பங்குகள் 3.24 சதவீதம் அதிகரித்துள்ளது


பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்ட பங்கு மூலதன பங்கு (600 சதவீதம்) பங்குதாரர் ரூபாய்க்கு பரிந்துரைக்க வேண்டும் என்று நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.