ஆபாச இணையதளங்களுக்கு உடனடியாக தடை விதிக்க பிரதமர் மோடிக்கு நிதிஷ் குமார் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் வெளியான அமெரிக்க புலனாய்வு துறையின் ஆய்வறிக்கையில், குழந்தைகளின் ஆபாச படங்களை இந்தியாவில் தான் அதிகம் பார்ப்பதாகவும், அதிலும் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இந்த எண்ணிக்கை அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் பட்டியலை தமிழக காவல் துறைக்கு மத்திய உள்துறை அனுப்பி வைத்துள்ளது.


இந்நிலையில் தற்போது ஆபாச இணையதளங்களுக்கு உடனடியாக தடை விதிக்க பிரதமர் மோடிக்கு நிதிஷ் குமார் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, 


சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து ஆபாச வீடியோக்களை பார்ப்பதன் மூலம் அவர்களது மனநிலை எதிர்மறையாக பாதிப்படுகிறது. மேலும் ஆபாச வீடியோக்களை பார்ப்பதன் மூலம் அவர்களது மனநிலை எதிர்மறையாக பாதிப்படும். 


பாலியல் பலாத்கார சம்பவங்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களிலும் பரப்பப்படுவதால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அதிகரிக்கத்து வருகிறது. ஆபாச இணையதளங்கள் மற்றும் பொருத்தமற்ற வீடியோக்களை தடை செய்ய  உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.