புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் (Pranab Mukherjee) மறைவுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் பல உலகத் தலைவர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் (Bangladesh), மறைந்த பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்நாட்டின் தேசியக் கொடி புதன்கிழமை (செப்டம்பர் 2, 2020) அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.


பிரணாப் முகர்ஜியின் மறைவுக்காக வங்கதேசம் ஒரு நாள் தேசிய துக்கத்தை அனுசரிக்கின்றது. அந்நாட்டில் நன்கு அறியப்பட்ட நபராக இருந்த முகர்ஜி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் (Sheikh Hasina) நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தார்.


திங்களன்று பிரணாப் முகர்ஜி இறந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, வங்கதேச பிரதமர், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, முகர்ஜி வங்கதேசத்தின் உண்மையான நண்பர் என்றும் அவரைப் புகழ்ந்தார்.


ஷேக் ஹசீனா,"அவர் எப்போதும் வங்கதேச மக்களால் மிகவும் மதிக்கப்படுகிறார், நேசிக்கப்படுகிறார். குறிப்பாக இந்தியாவின் 13 வது குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் அவரது உறுதியான ஆதரவும் பங்களிப்பும் இருந்தது. அவர் எப்போதும் ஆழ்ந்த மரியாதையுடன் எங்கள் நினைவுகளில் இருப்பார்” என்று கூறினார்.


ALSO READ: 1969 - 2017 வரை! "பாரத் ரத்னா" பிரணாப் முகர்ஜியின் அரசியல் பயணம் மற்றும் கடைசி மூச்சு


1971 ஆம் ஆண்டில் வங்கதேசத்தின் விடுதலைப் போருக்கு அவர் செய்த பங்களிப்புக்காக 2013 ஆம் ஆண்டில் வங்கதேச அரசாங்கம் அவருக்கு "பங்களாதேஷ் முக்திஜுதோ சோமனோனா" எனப்படும் விடுதலைப் போர் கௌரவத்தை வழங்கியது.


டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திலும் அந்நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.  மேலும் பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்துவதற்காக ஒரு நிகழ்வு இன்று பிற்பகுதியில் ஏற்பாடு செய்யப்படும்.


முன்னாள் குடியரசுத் தலைவரின் நினைவாக, அவருக்கு மரியாதை செய்யும் விதமாக, இந்தியா ஏற்கனவே ஏழு நாள் அரசாங்க துக்கத்தை அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து உத்தியோகபூர்வ கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்.


ALSO READ: Pranab Mukherjee: கட்சி வேறுபாடின்றி அனைவராலும் நேசிக்கப்படும் உண்மைத் தலைவர் ...!!!