வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவும் இந்தியாவும் வந்துள்ளது. தனது பயணத்தின் ஒரு பகுதியாக ஷேக் ஹசீனா ராஜஸ்தான் சென்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜ்மீரில் உள்ள சூஃபி துறவி க்வாஜா மொய்னுதீன் சிஸ்டியின் தர்காவைப் பார்வையிடுவதாக, அவர் விமானம் மூலம் ஜெய்ப்பூர் சென்றடைந்தார். ராஜஸ்தான் கல்வி அமைச்சர் பிடி கல்லா மற்றும் பிற உயர் அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர். 


மேலும் படிக்க | Watch Video: கர்தவ்யா பாதையாக மாறும் தில்லி ராஜ பாதை; பிரம்மிக்க வைக்கும் காட்சி!


இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய உடையணிந்த கலைஞர்கள் மேள தாளங்களுக்கு நடனமாடி, வங்கதேச பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அவரும் அவர்களுடன் இணைந்து நடனமாடினார். இதனைத் தொடர்ந்து, அவர்களுடன் இணைந்து ஷேக் ஹசீனா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.



ஷேக் ஹசீனாவின் வருகையை ஒட்டி தர்காவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெளிநாட்டுத் தலைவர்கள் வருகையின்போது பின்பற்றப்படும் வழிமுறைகளின்படி, தர்காவில் வேறு எந்த பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 


மேலும் படிக்க | ரஷ்யாவுடனான கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது: பிரதமர் மோடி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ