புது டெல்லி: கொரோனாவின் இரண்டாவது அலை முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை இணைய வங்கியினைப் பயன்படுத்த ஊக்குவிக்கின்றன, ஆயினும் வங்கி தொடர்பான ஒரு சில வேலைகளைச் செய்ய நாம் வங்கி கிளையைப் பார்வையிட வேண்டியது அவசியமாக இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், வங்கிக்குச் செல்வதற்கு முன், எந்த தேதிகளில் வங்கி விடுமுறைகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கியின் (RBI) இணையதளத்தில் கொடுக்கப்பட்ட வங்கி விடுமுறை பட்டியல் (Bank Holidays List May 2021) படி, மொத்தம் 12 நாட்கள் வங்கிகள் மே மாதத்தில் மூடப்படும். வாராந்திர விடுமுறை நாட்களும் இதில் அடங்கும். இருப்பினும், சில விடுமுறைகள் ஏற்கனவே முடிந்து மீதம் எட்டு விடுமுறைகள் உள்ளன. அதாவது வரும் நாட்களில் வங்கிகள் 8 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும்.


ALSO READ | Alert: இந்த 8 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்க! உடனடியாக இதை செய்யுங்கள்!


இங்கே காண்க, வங்கி விடுமுறைகளின் (Bank Holidays) பட்டியல்-
<< மே 9: ஞாயிறு (அனைத்து இடங்களிலும்)
<< 13 மே: ரமலான் ஈத் (ஈத்-உல்-பித்ர்). இந்த நாளில் பெலாப்பூர், ஜம்மு, கொச்சி, மும்பை, நாக்பூர், ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகள் விடுமுறை. 
<< மே 14: ஸ்ரீ பரசுராம் ஜெயந்தி / ரமலான் ஈத் (ஈத்-உல்-பித்ர்) / அக்ஷய திரிதியை பெலாப்பூர், ஜம்மு, கொச்சி, மும்பை, நாக்பூர், ஸ்ரீநகர் இல் வங்கிகள் விடுமுறை.
<< மே 16: ஞாயிறு (அனைத்து இடங்களிலும்)
<< மே 22: நான்காவது சனிக்கிழமை (அனைத்து இடங்களிலும்)
<< 23 மே: ஞாயிறு (அனைத்து இடங்களிலும்)
<< 26 மே: புத்த பூர்ணிமா. அகர்தலா, பெலாப்பூர், போபால், சண்டிகர், டேராடூன், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் இந்த நாளில் வங்கிகள் மூடப்படும்.
<< மே 30: ஞாயிறு (அனைத்து இடங்களிலும்)


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR