2135 கிளைகள் மற்றும் 16 ஆயிரத்து 138 பணியாளர்களுடன் செயல்படும் பிரபலமான வங்கிகளில் ஒன்று விஜயா வங்கி. தற்போது இந்த வங்கியில் மேலாளர் (சார்ட்டடு அக்கவுண்டன்ட்), மேலாளர் (சட்டம்), மேலாளர் (பாதுகாப்பு) போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சி.ஏ. இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சட்ட பட்டதாரிகள் அந்தந்த பிரிவு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 57 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.


விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம். ஏப்ரல் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மேலும் கூடுதல் விவரங்களை www.vijayabank.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.