வங்கி வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் அதற்க்கு வங்கியே பொறுப்பு என கேரளா உயர்நீதமன்றம் அதிரடியான தீர்ப்பை வெளியிட்டுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவரது கணக்கில் இருந்து 2,40,000 ரூபாய் திருடப்பட்டது. இதை தனக்கு திருப்பித்தர வங்கிக்கு உத்தரவிடக்கோரி, நுகர்வோர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்தார்.


நுகர்வோர் நீதிமன்றத்தில் SBI வங்கி பாதிக்கப்பட்ட நபருக்கு பணத்தை திரும்ப அளிக்கவேண்டும் என்று உத்தரிட்டது. இதை எதிர்த்து பாரத ஸ்டேட் வங்கி, கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம், ‘வாடிக்கையாளருக்கு வங்கி சேவை அளிக்கிறது. எனவே, அவரது நலன்களைப் பாதுகாப்பது வங்கியின் கடமை. அவரது கணக்கில் இருந்து பணம் திருடு போனால், அதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய வங்கியே பொறுப்பு ஏற்க வேண்டும்.


வங்கிகள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. வங்கிகள் எஸ்.எம்.எஸ் அனுப்பி உஷார்படுத்தினாலும், அதை வைத்து தப்பித்துக்கொள்ள முடியாது. எனவே, வங்கிக் கணக்கில் பயனாளருக்குத் தெரியாமல் பணம் திருடு போனால் வங்கியே பொறுப்பு ஏற்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.