நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’!
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போரட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ளன.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இன்று தமிழகத்தில் அனைத்து வங்கி கிளைகளும் மூடப்படுவதால் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பணம் எடுத்தல், பணம் போடுதல் போன்ற பணிகள் முழுவதும் பாதிக்கக்கூடும். ஏடிஎம் மையங்கள் மட்டும் பணம் உள்ளவரை செயல்படும். மேலும் வங்கி காசோலை பரிவர்த்தனை, அன்னிய செலவாணி, ஏற்றுமதி, இறக்குமதி பண நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும்.
வங்கிகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், ஜிஎஸ்டியில் சேவை வரியை சேர்க்கக் கூடாது, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது, ஆகியவை உட்பட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்களும் இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
நாடு முழுவதும் 10,00,000 வங்கி ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 65,000 வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.