ஏதாவது வங்கியில் உங்களுக்கு முக்கியமான வேலை இருந்தால், அந்த வேலையை நீங்கள் டிசம்பர் 24 ஆம் தேதி தான் செய்யமுடியும். அந்த நாளையும் விட்டால் மீண்டும் டிசம்பர் 26 ஆம் தேதிக்கு பிறகுதான் செய்யமுடியும். ஏனென்றால் வங்கி அப்பொழுது தான் இயங்கும். அதாவது ஊதிய உயர்வு, பென்ஷன் முறையில் மாற்றம் மற்றும் வங்கிகள் இணைப்புக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் இன்று முதல் வங்கி ஊழியர்கள் சங்கம் ஈடுபட உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், இன்று வங்கி இயங்காது. நாளை (டிசம்பர் 22) மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 23) விடுமுறை. மீண்டும் டிசம்பர் 24 வங்கி இயங்கும் எனவும். அடுத்த நாள் டிசம்பர் 25 விடுமுறை என்பதால் வங்கி இயங்காது. டிசம்பர் 26 ஆம் தேதியும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது. ஒருவளை வேலை நிறுத்தம் டிசம்பர் 24 ஆம் தேதியும் தொடர்ந்தால் வங்கிகள் ஆறு நாட்களுக்கு இயங்காது. டிசம்பர் 24 ஆம் தேதி வங்கி இயங்கினால் விடுமுறையுடன் சேர்ந்து வங்கிகள் ஐந்து நாட்களுக்கு இயங்காது.


டிசம்பர் 27 முதல் வங்கிகளில் வழக்கம் போல இயங்கும் எனத் தெரிகிறது. டிசம்பர் 24 ம் தேதியை தவிர, ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காததால் ஏ.டி.எம் இல் கூட்டம் அலைமோதும் எனத் தெரிகிறது. 


நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள வங்கி ஊழியர்கள் சங்கங்கள் சார்பாக சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.