பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக தலைமையிலான சட்டமன்றத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான பசவராஜ் பொம்மை புதன்கிழமை மாநிலத்தின் 23 வது முதல்வராக பதவியேற்றார்.  மாநில ஆளுநர் தாவர்சந்த் கெஹ்லாட்  அரசாங்கத்தை அமைக்க செவ்வாய்க்கிழமை அவரை அழைத்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜ் பவனில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்


"சட்டமன்றக் கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஆளுநருக்கு அறிவித்துள்ளேன்" என்று பொம்மை கூறினார். அரசாங்கத்தை அமைக்க அவர் என்னை அழைத்திருக்கிறார். ஆளுநர் அலுவலகத்தின்படி, பதவியேற்பு விழா ராஜ் பவனில் நடந்தது. பொம்மை தனியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அவருடன் எந்த அமைச்சரும் பதவியேற்கவில்லை.



எடியூரப்பா (Yediyurappa), தனது அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ஆளுநர் எடியூரப்பாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு, அவர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவை உடனடியாக கலைத்தார். எனினும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தொடர்ந்து முதலமைச்சராக பணியாற்றும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.


ALSO READ: கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பசவராஜ் போமாய் தேர்வு செய்யப்பட்டார்


புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை யார்?


பசவராஜ் பொம்மை (Basavaraj Bommai) ஒரு காலத்தில் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பாவின் நிழல் என்று அழைக்கப்பட்டார். முன்னதாக, எடியூரப்பாவின் அரசாங்கத்தில் உள்துறை, சட்டம், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சட்டமன்ற விவகாரங்களின் இலாகாக்களுக்கு தலைமை தாங்கிய அவர், ஹவேரி மற்றும் உடுப்பி மாவட்டங்களுக்கு பொறுப்பான அமைச்சராகவும் இருந்தார்.


பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர்.பொம்மை ஜனதா பரிவாரின் மூத்த தலைவராக இருந்தார். மேலும் அவர் கர்நாடகாவின் 11 ஆவது முதல்வராகவும் இருந்தார். பசவராஜ் பொம்மை, ஜனவரி 28, 1960 அன்று ஹுப்பல்லியில் பிறந்தார். பசவராஜ் பொம்மை மெகானிக்கல் பிரிவில் பொறியியல் படிப்பு படித்தார். புனேவில் டாடா மோட்டார்ஸில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் அவர் ஒரு தொழிலதிபரானார். 


அவரது சாதி, கல்வித் தகுதி, நிர்வாக திறன்கள் மற்றும் எடியூரப்பா மற்றும் பாஜக (BJP) மத்திய தலைவர்களுடனான நெருக்கம் ஆகியவை அவர் முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணங்கள் என்று நம்பப்படுகிறது.


ALSO READ:கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR