கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்

கர்நாடகா முதல்வர் பி.எஸ். எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 26, 2021, 12:30 PM IST
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார் title=

கர்நாடகா முதல்வர் பி.எஸ். எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இன்று மாலை ஆளுநரை சந்திக்கவுள்ள எடியூரப்பா ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, கடந்த வாரம் டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை எடியூரப்பா சந்தித்திருந்தார். இதற்கிடையில் எடியூரப்பா (BS Yediyurappa) ராஜினாமா தெய்யக்கூடாது என அவர் சார்ந்த லிங்காயத் மடாதிபதிகள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

75 வயதான தலைவர்களுக்கு பாஜக கட்சியில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. புதிய மற்றும் எதிர்காலத்துக்கான இளைய தலைவர்க்ளை உருவாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படு வருகின்றது.

ALSO READ: தில்லியின் முகாமிட்டுள்ள EPS-OPS; அரசியல் பரபரப்பின் காரணம் என்ன..!!!

முன்னதாக, கர்நாடக (Karnataka) மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி. யோகேஸ்வர், கர்நாடக பாஜக MLA-க்கள்  அரவிந்த் பெல்லத்,  பசனகுடா, ஆகியோர் எடியூரப்பாவை பொது தளங்களில் பகிரங்கமாக விமர்சித்து வந்தனர். எடியூரப்பாவிற்கு 78 வயதான நிலையில், அவரது வயதை காரணம் காட்டி, வேறு யாரையாவது முதல்வராக நியமிக்கும்படி கோரி வந்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் தில்லி சென்ற முதல்வர் எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை சந்தித்தார். மேலும், கடந்த வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடியூரப்பா, ஜூலை 26 ம் தேதி முதல்வராக பதவி வகித்ததில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், கட்சித் தலைவர் ஜே.பி.நாட்டா உத்தரவை கடைபிடிக்க தயாராக இருப்பதாகக் கூறினார்.

கட்சித் தலைமை அளிக்கும் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், தலைமையிடமிருந்து வரும் தகவல்களைப் பொறுத்து தான் தனது முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் பி.எஸ். எடியூரப்பா முன்னதாக தெரிவித்திருந்தார். 

ALSO READ: கர்நாடகா முதல்வராக எடியூரப்பா நீடிப்பாரா; இன்று விடை கிடைக்கும் என தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News