இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் சவுரவ் கங்குலி புதன்கிழமை கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சௌரவ் கங்குலிக்கு (Sourav Ganguly) நேற்று இரவு உடல்நலன் சரியில்லாமல் போனது. இன்று மதியம் அவருக்கு லேசான மார்பு வலி ஏற்பட்டதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


முன்னதாக, ஜனவரி 2 ஆம் தேதி தனது பெஹாலா இல்லத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது, அவருக்கு மார்பில் லேசான வலியும், அதைத் தொடர்ந்து லேசான மயக்கமும் வந்தது. இதையடுத்து அவர் கொல்கத்தாவின் (Kolkata) உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது.


ALSO READ: மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் Sourav Ganguly: ரசிகர்கள் மகிழ்ச்சி


ஜனவரி 2 ஆம் தேதி 48 வயதான கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது வலது கரோனரி தமனியில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. அவருக்கு மருந்துகள் தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் அவர் தனது வீட்டில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்று கூறப்பட்டது.


தற்போது நேற்று இரவும், மீண்டும் இன்று மதியமும் மீண்டும் அவருக்கு மார்பில் வலியும் உடல்நலக் குறைபாடும் ஏற்பட்டதால், அவர் மிண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கங்குலியின் உடல்நலன் குறித்து மேலும் செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.


ALSO READ: Shocking News: BCCI President தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR