மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான ராஜா படேரியா, காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் உரையாடும் வீடியோ ஒன்று வெளியானது. அதில், இந்திய அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என்றால், பிரதமர் நரேந்திரே மோடியை கொலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், அதே வீடியோவில், மோடியை வீழ்த்துவதைதான் கொல்ல வேண்டும் என கூறினேன் என விளக்கம் அளித்தார். ஆனால், அவர் கொலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, ராஜா படேரியாவை கைதுசெய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்துகள், மன்னிக்க முடியாத குற்றம் என மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ யாத்திரைக்கான உண்மை முகம் இதுபோன்ற செயல்களால்தான் வெளியே வருகிறது என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டியுள்ளார். 



வைரலாகி வரும் அந்த சர்ச்சைக்குரிய வீடியோவில்,"மோடி தேர்தலை ஒட்டுமொத்தமாக அழிக்க உள்ளார். மோடி மதம், ஜாதி, மொழி அடிப்படையில் மக்களை பிரிப்பார். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. அரசியல் சாசனம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் மோடியை கொல்ல தயாராக இருங்கள்" என குறிப்பிட்டுள்ளார். அதே வீடியோவில், கொல்ல தயாராக இருங்கள் என்றால், தேர்தலில் வீழ்த்த தயாராக இருங்கள் என்று அர்த்தம் என விளக்கமும் அளித்தார். 


மேலும் படிக்க | பிரபல பாலிவுட் நடிகை கொலை வழக்கில் திருப்புமுனை! மகன் கைது


தொடர்ந்து, தான் மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை பின்பற்றுபவர் என்றும், சிறுபான்மையினரை காக்கவே பிரதமர் மோடியை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற ரீதியில் அவ்வாறு கூறினேன் என விளக்கமளித்தார். பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் நகரில் ராஜா படேரியா இவ்வாறு பேசியிருந்தார். அந்த வீடியோதான் வைரலானது. 


ராஜா படேரியாவின் இந்த வீடியோவை அடுத்து, முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், உள்துறை அமைச்சர் நாரோட்டம் மிஸ்ரா, மத்திய அமைச்சர் பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிவராஜ் சிங் சௌகான் கூறுகையில்,"பிரதமர் மோடி மக்கள் இதயங்களில் வாழ்கிறார், அவர் முழு நாட்டின் அபிமானத்திற்கும் நம்பிக்கைக்கும் மையமாக இருக்கிறார். 


தேர்தல் போரில் காங்கிரஸார் பிரதமரை எதிர்கொள்ள முடியாது. அவரை கொலை செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியுள்ளார். இது பொறாமையின் உச்சம், அதிகப்படியான வெறுப்பு. காங்கிரஸின் உண்மையான நோக்கம் வெளிப்பட்டுவிட்டன. ஆனால் இதுபோன்ற விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.  


மேலும் படிக்க | மெட்ரோவில் டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர்... மாணவர்களுடன் உரையாடினார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ