மேற்குவங்கத்தை சேர்ந்து தொலைக்காட்சி நடிகை பயேல் சக்ரபோர்ட்டி, சில்குரி ஓட்டலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செப்டம்பர் 5-ஆம் நாள் மாலை இவரது உடல் மீட்கப்பட்டதாக தாகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது மறணத்தில் மர்மங்கள் நிலவுவதாக இவ்வழக்கை விசாரித்து வரும் உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் கொல்கத்தா நகரின் நேதாஜி நகரை சேர்ந்த தொலைகாட்சி நடிகை தற்கொலை செய்துக்கொண்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஏக் மசேர் சத்தியா, சோக்கர் தாரா துரி, கொண்டேன் கின்னி உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள பயேல், தற்போது தனது வெள்ளித்திரை பயணத்தை துவங்க முயற்சிகள் மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது.


சமீபத்தில் விவாகரத்து செய்துகொண்ட இவர் தற்போது தனது மகனுடன் வசித்து வந்ததாக இவருடன் பணியாற்றிய தொலைக்காட்சி நடிகை சத்யான்தானி குஹார்துகுட்டா தெரிவித்துள்ளார். மேலும் பயேலின் இறப்பினை தன்னால் நம்ப இயலவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.