பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா
பல்வேறு வசதிகள் செய்து தர 2 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளது என குற்றம் சாட்டிய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா இன்று தீடிரென்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட  சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


கடந்த 23-ம் தேதி சிறைத்துறை டிஐஜியாக ரூபா பதவி ஏற்றார். இதையடுத்து அவர் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளுக்கு விசிட் அடித்து வந்தார். இந்த நிலையில் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார்.


அப்போது சசிகலாவுக்கு ஜெயிலில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்திருப்பதும், அதற்காக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சோதனையின் போது ரூபாவிடம் அதிகாரிகள் கூறினார்கள்.


இதையடுத்து ரூபா கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில், சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி செய்து கொடுத்து இருப்பது சிறை விதிமுறைப்படி தவறு. மேலும் தாங்கள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியானது.


இது குறித்து விசாரிக்க, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சிறைத்துறை டிஐஜி.,யாக இருந்த ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, கர்நாடக அரசு, இன்று பிறப்பித்துள்ளது.