பெங்களூரு: பெங்களூரில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக லாக்டவுன் உள்ளதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒருவர்,  தனது Yamaha R1 பைக்கில் சாலையில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பயணம் செய்ததுடன் அதனை வீடியோவும் எடுத்து பகிர்ந்துள்ளார். அது படு வேகமாக வைரலாகியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேக வரம்பை மீறி அவர் பைக் பயணம் மேற்கொள்ளும் வீடியோ வைரலாகிய பின்னர், காவல்துறையினர் அவரைக் கண்டுபிடித்து, அவரது விலையுயர்ந்த பைக்கை பைப்பற்றியதுடன், வழக்கு பதிவு செய்த பின்னர் கைது செய்தனர்.


"இந்த வீடியோ மிகவும் வைரலாகிவிட்டது. Ecity ஃப்ளைஓவரில் கிட்டத்தட்ட 300 கிமீ வேகத்தில் சென்றார். இது மிகவும் ஆபத்தான வேகம். இதனால், அவரது உயிருக்கும் ஆபத்து, பிறரின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. காவல் துறையினர், சம்பந்தப்பட்ட நபரை கண்பிடித்து,   Yamaha 1000 CC பைக்கை கைப்பற்றினர் என மூத்த போலீஸ் அதிகாரி ட்வீட் செய்துள்ளார்.



முனியப்பா என காவல் துறையால் அடையாளம் காணப்பட்ட அந்த நபர்,  ஏறக்குறைய 10 கி.மீ நீளமுள்ள எலக்ட்ரானிக் சிட்டி ஃப்ளைஓவரில் தனது பைக்கை ஓட்டிச் சென்றார். அவர் ஓட்டிச் சென்ற சாலையில்,  இரு திசைகளிலிருந்தும் வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. 


ALSO READ | லாக்டவுனால் எந்த பயனும் இல்லை... நாளை முதல் இயல்பு நிலை: BS Yediyurappa


பதினைந்து நாட்களுக்கு முன்பு, நகர சாலைகளில் வாகனத்தில் சாகஸம் செய்த மூன்று இளைஞர்கள் ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்து உயிர் இழந்ததாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது.


R1 வகை பைக் ஜப்பானிய  நிறுவனமான யமஹாவின் முதன்மை மாடல். 13,500 RPM, 200 PS ஆற்றல் கொண்ட 1,000 CC சூப்பர் ஸ்போர்ட் பைக்கான இது, உலகின் மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாடல்களில் ஒன்றாகும். இதன் விலை இந்தியாவில் ரூ .20 லட்சத்துக்கு அதிகம்.


ALSO READ விமானத்தை பயன்படுத்திய முதல் மனிதன் இலங்கை வேந்தன் ராவணன்: இலங்கை அரசு