பைக்கில் வீலிங் செய்ய இளைஞர்! மல்லுக்கட்டாக தூக்கி எறிந்த பொது மக்கள்!
பெங்களூருவில் பைக்கில் ஸ்டண்ட் செய்ய இளைஞர்களால் விரக்தி அடைந்த பொதுமக்கள், அவர்களில் ஒருவரை தடுத்து நிறுத்தி பைக்கை மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசி உள்ளனர்.
பெங்களூருவில் பைக் ரேஸ் நடப்பது அதிகமாகி உள்ளது. முக்கிய சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடுவதால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சிலர் ஸ்டண்ட் செய்து உள்ளனர். இதனால் விரக்தியடைந்த பொதுமக்கள் சிலர், பைக் ரேஸில் ஈடுபட்ட ஒருவரை வழிமறித்து மேம்பாலத்தில் இருந்து பைக்கை தூக்கி வீசியுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த சரியான தகவல் இல்லை என்றாலும், ஆகஸ்ட் 15 அன்று நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேம்பாலத்தில் கூடி இருந்த மக்கள் வீலிங் மற்றும் ஸ்டண்ட் செய்ய பயன்படுத்தப்பட்ட பைக் மற்றும் ஸ்கூட்டரை மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசுகின்றனர். பாலத்தின் கீழே இருந்த சிலர் இதனை வீடியோ எடுத்துள்ளனர். தூக்கி வீசப்பட்ட பைக் சுக்கு நூறாக நொறுங்கி போனது. இந்த வீடியோவை பலரும் சேர் செய்து, பைக் ரேஸ் மற்றும் வீலிங் செய்பவர்களுக்கு இதுதான் சிறந்த தண்டனை என்று தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் பெங்களூருவில் உள்ள மற்றொரு மேம்பாலமான ஹெப்பல் பாலத்தில் சென்று கொண்டு இருந்த வோல்வோ பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் நின்று கொண்டு இருந்த இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் மீது மோதிய பெரும் விபத்தை ஏற்படுத்தியது. பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேருந்து முதலில் ஒரு பைக்கின் மீது இடித்து தள்ளியது. பின்பு, முன்னாள் இருந்த பல வாகனங்களை இடித்து கொண்டு சென்றது. பிறகு பேருந்தின் டயரில் ஒரு கார் கிடைமட்டமாக நின்ற பிறகுதான் பேருந்து ஒரு இடத்தில் நின்றது. இந்த கோரமான சம்பவம் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் ஒரு வாகன ஓட்டியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஹைதராபாத்திலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 20 வயது இளைஞன் ஒருவர் காரில் வேகமாக சென்று வழிப்போக்கர் ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். காரில் மோதியவர் படத்தில் வரும் காட்சி போல எதிர்புறத்தில் தூக்கி எறியப்பட்டார். இந்த சம்பவம் நடைபெறும் போது அந்த இளைஞர் குடி போதையில் இருந்துள்ளார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் மணீஷ் கவுட் என்பதும், அவர் தேவேந்திர நகர் சாலையில் இருந்து கஜூலராமரம் சாலைக்கு சென்று கொண்டிருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சி ஒன்றும் வெளியாகி பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடி போதையில் கவனக்குறைவாக காரை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி உள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் விபத்திற்கு பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் அங்கிருந்து தப்பி ஓட முயல்வதும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ