இந்து மாணவியை நமாஸ் செய்ய சொன்ன ஆசிரியர் - பெற்றோர் கண்டனம்
பி.டி.எம் லேஅவுட்டில் அமைந்துள்ள பள்ளி, புதன்கிழமை இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியது.
பெங்களூரு: பெற்றோர் ஒருவர் வெளியிட்ட வீடியோ ட்விட்டரில் வைரலானதை அடுத்து, பெங்களூருவில் உள்ள ஆர்க்கிட் தி இன்டர்நேஷனல் பள்ளி, அந்த பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. ஒரு கணித வகுப்பின் போது பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை அல்லாவிடம் பிரார்த்தனை செய்யும்படி கூறியதாக காட்டும் அந்த வீடியோ வைரலானது.
பி.டி.எம் லேஅவுட்டில் அமைந்துள்ள பள்ளி, புதன்கிழமை இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியது. பள்ளி சார்பில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. பள்ளி மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று பள்ளி தெரிவித்தது.
"நிர்வாகம் பெற்றோரிடம் விரிவாகப் பேசியது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடந்தது. சிசிடிவி காட்சிகள் சரிபார்க்கப்பட்டன. அதே வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களின் பெற்றோர்களிடமும் பேசினோம்” என்று பள்ளியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பள்ளியின் அறிக்கையின்படி, பள்ளி குற்றச்சாட்டை விசாரித்து, அந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், ஆசிரியர் தவறாக குற்றம் சாட்டப்பட்டதாக தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டியுள்ள பெற்றோர் கூறியுள்ளவற்றை வேறு எந்த பெற்றோரோ அல்லது மாணவர்களோ உறுதிப்படுத்தவில்லை என்றும் பள்ளி கூறியுள்ளது.
இந்த வீடியோ செவ்வாயன்று ட்விட்டரில் வெளியிடப்பட்டது. பின்னர் இந்த வீடியோ புதனன்று வைரல் ஆனது. அந்த வீடியோவில், பி.டி.எம் லேஅவுட்டில் உள்ள ஆர்க்கிட் தி இன்டர்நேஷனல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, தனது ஆசிரியர், அல்லாவிடம் பிரார்த்தனை செய்யும்படி மாணவர்களை வற்புறுத்தியதாக கூறியுள்ளார். இதை மாணவர்களின் பெற்றோர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
"ஒரு கிண்ணத்தின் வடிவத்தில் எங்கள் கைகளை வைத்து, பின், கைகளை எங்கள் கண்களுக்கு மேல் வைக்கும்படி அவர் எங்களிடம் கூறினார். நாங்கள் அப்படி செய்யவில்லை என்றால், அவர் கத்துவார்” என்று குழந்தை வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளது. "வீடியோவில் கூறப்பட்டுள்ள கண் உள்ளங்கை உடற்பயிற்சி, ஆன்லைன் வகுப்பு அமர்வுகளின் போது நடத்தப்படும் இரண்டு நிமிட கண் உடற்பயிற்சி (TMEE) ஆகும்" என்று பள்ளி விளக்கம் அளித்துள்ளது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, சிலர் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பெற்றோர் முன்பு இந்த சம்பவத்தை பள்ளியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், பள்ளி எந்தவொரு நடவடிக்கை அல்லது விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பே, பெற்றோர் அந்த வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பியதாக பள்ளி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ALSO READ | Advisory: மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த CBSE! காரணம் இதுதான்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR