பெங்களூருவை சேர்ந்த பெண் தொழிலதிபர் சுசானா சென், தனது 4 வயது மகனை கோவாவில் கொலை செய்து சூட் கேஸில் உடலை மறைத்து வைத்து பெங்களூருவிற்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்த வழக்கு விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த கொலை வழக்கு குறித்த பகீர் கிளப்பும் தகவல்கள் ஒவ்வொரு நாள் விசாரணையில் இருந்தும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணையில், தனது மகனை எப்படி கொலை செய்தார் என்பது குறித்தும், ஏன் இந்த கொலையை செய்தார் என்பது குறித்தும் சுசானா சென் தெரிவித்துள்ளார். போலீஸ் விசாரணைகளில் இருந்து வெளியாகியுள்ள பகீர் கிளப்பும் உண்மைகளை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பெங்களூர் சிஇஓ சுசனா சேத் மகனை கொன்றது ஏன்?


>சுசானா சென், கோவாவில் உள்ள காண்டோலிம் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜனவரி 6 முதல் 8ஆம் தேதி வரை தங்கியிருந்துள்ளார். அவர் தங்கியிருந்த அந்த அரையில்தான், அவரது நான்கரை வயது மகனை கொலை செய்திருப்பார் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். குழந்தையை கொலை செய்த பிறகு அவர் உடலை ஒரு சூட்கேஸில் வைத்து கர்நாடகாவில் இருந்து டாக்சி மூலம் கடந்த திங்கட்கிழமை கிளம்பியதாக கூறப்படுகிறது. 


>அந்த குழந்தை, துணி அல்லது தலையணையால் அழுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். 


>குழந்தையை கொலை செய்ததாக கூறப்படும் சுசானா சென், கடந்த திங்கட்கிழமை இரவு கர்நாடகாவில் இருந்து டாக்ஸியில் புறப்பட்டுள்ளார். அந்த டாக்ஸி ஓட்டுநர், 10 மணி நேர பயணத்தில் சுசானா ஒரு வார்த்தை கூட பேசவில்லை என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 


>காவல் துறையினரின் தற்போதைய விசாரணையின்படி, மகனை கொலை செய்த சுசானா தற்போது வரை விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 


>தனது குழந்தை இறந்ததற்காக, இவர் தற்போது வரை எந்த இரக்க அல்லது சோக உணர்வையும் காட்டவில்லை என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


>39 வயதாகும் சுசானா சென், தனது முன்னாள் கணவரான வெங்கட் ராமணிடம் குழந்தை யாரிடம் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்பது குறித்த வழக்கில் அவருக்கு எதிராக போராடி வந்துள்ளார். 


>இது குறித்து சுசானா, ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். அதில், தன் கணவருடன் கோர்டில் போராடுவதால் தனக்கு எந்த அளவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துள்ளார். அந்த கடிதம், ஒரு டிஷ்யூ பேப்பரில், ஐலனரில் உபயோகப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாம். 


>அந்த கடிதத்தில் மேலும் என்ன எழுதியிருந்தார் என்பதை வெளியிட போலீஸார் மறுத்துவிட்டனர். ஆனால், அந்த கடிதத்தின் மூலம் அவர் குழந்தையின் கஸ்டடி யாரிடம் இருக்க வேண்டும் என்பது குறித்த வழக்கினால் அவர் மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்ததாக கூறியுள்ளனர். 


>கடந்த ஜனவரி 6ஆம் தேதியன்று, தனது முன்னாள் கணவரான வெங்கட் ராமனுக்கு இவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மறு நாள் வந்து குழந்தையை சந்திக்குமாறு கூறியுள்ளார். ஆனால், பெங்களூரு வீட்டிற்கு வெங்கட் ராமன் வந்து பார்த்த போது, அங்கு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. 


>சுசானா சென், கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கணவர் தன்னையும் தனது கணவரையும் அடித்து துன்புருத்துவதாக விவாகரத்து ஆவணங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இதனை வெங்கட் ராமன் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார். 


>அந்த புகாரை அடுத்து, வெங்கட் ராமன் அவரது மனைவியையோ குழந்தையையோ பார்க்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதற்கு பிறகு அவருக்கு குழந்தையை பார்க்க நீதிமன்றம் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இது, சுசானாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


மேலும் படிக்க | ராமர் கோயில் திறப்பு... 11 நாள் விரதத்தை கடைபிடிக்கும் பிரதமர் மோடி - என்னென்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ