பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் நிலை, பெண்களுக்கு எதிரான கொடுமை பற்றி பேச மறுக்கிறார் பிரதமர் என காங். தலைவர் ராகுல் காந்தி தாக்கு...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் கிடு கிடு என விண்ணை முட்டும் உயரத்தில் சென்று கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (செப்டம்பர் 10 ஆம் தேதி) நாடு தழுவிய “பாரத் பந்த்” கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி டில்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த பேரணியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, கடந்த 70 ஆண்டுகளில் இது போன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது இல்லை. ஆனால் இந்த விலை உயர்வு குறித்து பிரதமர் மோடி மவுனமாக இருந்து வருகிறார். இது வரை இல்லாத அளவிற்கு பண மதிப்பு குறைந்துள்ளது. பிரதமர் மோடி இது வரை கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 



மத்திய அரசு ஏழகைளை மறந்து பணக்காரர்களுக்கே சலுகை செய்கிறது. ரபேல் விமானம் வாங்கப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி இந்த நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர் வாய் திறக்க மறுக்கிறார். பண மதிப்பிழப்பு காரணமாக கறுப்பு பணத்தை பலரும் வெள்ளையாக மாற்றினர். விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். இன்றைய பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த எதிர்கட்சியினருக்கு நன்றி. வரும் காலத்தில் எதிர்கட்சிகள் ஒன்றுபட்டு மோடி அரசை வீழ்த்துவோம் என அவர் பேசினார்.