புதுடெல்லி: டெல்லி-மும்பை ரயில் பாதையில் ஒரு வினோதமான நிலையம் உள்ளது. இந்த நிலையம்மத்திய பிரதேசத்தின் ஜலாவார் மாவட்டம் மற்றும் ராஜஸ்தானின் கோட்டா பிரிவில் வருகிறது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு இடையில் உள்ள்ள பவானி மண்டி ரயில் நிலையம் தான் அந்த ரயில் நிலையம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் உள்ள ஒரு வினோதமான ரயில்வே  ஸ்டேஷனில் ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி  மற்றொரு மாநிலத்திலும் நிற்கிறது என்றால் நம்ப முடிகிறதா. இந்த ரயில் நிலையத்தில், ராஜஸ்தானின் பலகை ரயில் நிலையத்தின் ஒரு முனையிலும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் பலகை மறுமுனையிலும் நிறுவப்பட்டுள்ளன.


இந்த ஸ்டேஷனில் ரயில் நிற்கும்போது, ​​அது மத்திய பிரதேசத்தில் பாதியும், ராஜஸ்தானில் பாதியும் என்ற அளவில் நிற்கிறது. இந்த தனித்துவமான ரயில் நிலையத்தின் முழு கதையையும் அறிந்து கொள்ளலாம். பவானி மண்டி நிலையம் ராஜஸ்தான் மற்றும்  மத்திய பிரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளதால் பல வழிகளில் சிறப்பு வாய்ந்தது.


ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!


இங்கு அருகில் வசிக்கும் மக்கள் மத்திய பிரதேசத்தின் பைன்சோதமண்டியின் முகவரி மற்றும் பின்கோட் உடன் கூடிய ஆதார் அட்டை அல்லது வேறு எந்த அரசாங்க ஆவணத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். இரு புறங்களில் இருந்தும் தினசரி வேலைக்காக, மக்கள் அதிகம் பயணம் செய்வதால், இந்த பவானி மண்டி நிலையத்தின் எப்போதும் கூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக, இரு மாநிலங்களின் கலாச்சார பகிர்வையும் இங்கே காணலாம்


ALSO READ | IRCTC E-Catering: தரமான உணவு பெற அங்கீரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் பட்டியல் இதோ..!!!

இங்குள்ள பிளாட்பாரத்தில்  டிக்கெட்டுகளை எடுக்கும் பயணிகள் ராஜஸ்தானில் நிற்கிறார்கள் என்றால், டிக்கெட் கொடுக்கும் அரசாங்க பணியாளர் மத்தியப் பிரதேசத்தின் எல்லையில் அமர்ந்திருக்கிறார். பவானி மண்டி ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரயில்களும் ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களில் நிற்கின்றன. பவானி மண்டி நகரின் புறநகரில் அமைந்துள்ள வீடுகளின் முன் கதவுகள், மத்தியப் பிரதேசத்தின் பைன்சோதமண்டி நகரத்தில் திறக்கப்படுகின்றன, அவற்றின் பின் கதவுகள் ஜலாவாரின் பவானி மண்டியில் திறக்கப்படுகின்றன.


ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்


பவானி மண்டி நகரம் ஜலாவார் எல்லையில் இருப்பதால் போதைப்பொருள் கடத்தலுக்கு  பெயர் போனது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெரும்பாலும் இங்குள்ள புவியியல் நிலையை பயன்படுத்திக் கொள்கிறார்கள், அதாவது, மத்தியப் பிரதேசத்தில் குற்றத்தைச் செய்த உடனேயே, அவர்கள் ராஜஸ்தானுக்கு வருகிறார்கள் அல்லது ராஜஸ்தானில் குற்றங்களைச் செய்தபின் மத்தியப் பிரதேசம் நோக்கிச் செல்கிறார்கள். எனினும், இதன் காரணமாக இரு மாநில போலீசாருக்கும் இடையே அடிக்கடி எல்லை தகராறு ஏற்படுகிறது.


இதை அடிப்படையாக கொண்டு 2018 ஆம் ஆண்டில், ஒரு பாலிவுட் நகைச்சுவைத் திரைப்படமும் அதில் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் 'பவானி மண்டி தேசன்'. 


ALSO READ | IRCTC: மூத்த குடிமக்களுக்கு கன்பர்ம் லோயர் பர்த்? ரயில்வே கூறியது என்ன..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR