Cycling பிரியர்களா நீங்கள்? உங்களுக்கு பயன் தருதம் வகையினில் கர்நாடக அரசு புதுத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலத்தில் சுற்றுசூழல் மாசினை தவிர்கும் நடவடிக்கையாக, மாநிலத்தின் முதல் ‘Bicycle Mayor’-னை நியமிக்க திட்டுமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பினை பேனும் வகையில் இந்த ‘Bicycle Mayor’-கள் மாநிலத்தில் சைக்கில் பயணத்தினை உத்வேகப்படுத்த வேண்டும்.


டச்சு நிறுவனமான BYCS-ன் செயல்திட்டங்களில் ஒன்றான இந்த திட்டத்தின் மூலம், கனிம எண்ணெய்களை பயன்படுத்தும் வாகனங்களை குறைத்து மாசுகளை குறைக்கும் மிதிவண்டிகளை இயக்க மக்களிடம் வலியுறுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் படி வரும் 2030-ஆம் ஆண்டிற்குள், மாநிலத்தின் 50% போக்குவரத்தினை மிதிவண்டி போக்குவரத்தாக மாற்றவேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.


இந்த திட்டத்தினை செயல்படுத்தவும், மேலாண்மை செய்யவும் ‘Bicycle Mayor’ நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ‘Bicycle Mayor’ பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Bicycle Mayor என்னும் இணைப்பில் சென்று பதிவு செய்யலாம். 


உலகளவில் 7 நாடுகளில் Bicycle Mayor-கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு போபாலில் முதல் Bicycle Mayor நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.