Sultan Bathery​ BJP Controversy: ஒவ்வொரு நகரங்களின் பெயர்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் மாற்றமாகி வருவது இயல்புதான். நமது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் பெயர் மெட்ராஸ் என்பதில் இருந்து மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பல இஸ்லாமிய பெயர்களை கொண்ட நகரங்களின் பெயர் மாற்றப்பட்டிருப்பது இயல்பானதாக கருத முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, உத்தர பிரதேசத்தின் அலகாபாத் என்ற பெயரை பிரக்யராஜ் என மாற்றம் பெற்றது. சத்தீஸ்கரின் நியூ ராய்ப்பூர் அடல் நகர் என பெயர் மாற்றம் பெற்றது. மத்திய பிரதேசத்தின் ஹோஷங்காபாத் நர்மதாபுரம் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரின் பெயர் சத்ரபதி சாம்பாஜி நகர் என பெயர் பெற்றது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.


பாஜக தலைவரின் வாக்குறுதி


இவை பெரும்பாலும் பாஜக ஆளும் மாநிலங்களில் அதுவும் வட இந்திய பகுதிகளில்தான் அதிகம் காண முடிகிறது. அந்த வகையில், இந்த பெயர் மாற்ற விவகாரம் தற்போது தென்னிந்தியாவும் பக்கம் வீசத் தொடங்கியிருக்கிறது. இதன் பின்னணியிலும் பாஜகவே உள்ளது. கேரளாவின் பாஜக தலைவர் சுரேந்திரன் இந்த சர்ச்சையை கிளப்பி உள்ளார். 


மேலும் படிக்க | 'பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும்' - நிர்மலா சீதாரமன் கணவர் அட்டாக்


தற்போது அவர் வயநாடு தொகுதியில் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். குறிப்பாக, ராகுல் காந்தி இங்கு போட்டியிடும் நிலையில் அவர் எதிர்த்து பாஜக இங்கே இவரை இறக்கியுள்ளது. அந்த வகையில், இங்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, தான் வெற்றி பெற்றால் அங்குள்ள சுல்தான் பத்தேரி என்ற நகரத்தின் பெயர் கணபதி வட்டம் என மாற்றப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.  இந்த சுல்தான் பத்தேரி நகரம் மைசூர் மன்னர் திப்பு சுல்தானுக்கு தொடர்புடையதாகும். 


யார் இந்த திப்பு சுல்தான் - பாஜக


சுரேந்திரன் பிரச்சாரத்தின் போது பேசியதாவது,"யார் இந்த திப்பு சுல்தான்...? வயநாட்டிற்கும், வயநாடு மக்களுக்கும் அவர் எந்த வகையில் முக்கியத்துவம் பெற்றவர்? அந்த பகுதி கணபதி வட்டோம் என்றழைக்கப்பட்டது, அது அங்குள்ள மக்களுக்கும் தெரியும். கணபதி வட்டம் என்ற பெயர் மாற்றப்பட்டது மக்களுக்கும் தெரியும். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இன்னும் திப்பு சுல்தானையே பிடித்துகொண்டிருக்கின்றனர். அவர் பல கோயில்களில் தாக்குதல் செய்தவர், கேரளாவில் பல லட்சம் மக்களை இந்து மதத்தில் இருந்து மாற்றியவர், குறிப்பாக மலபார் பகுதியிலும், வயநாடு பகுதியிலும்..." என்றார். 


'இது கேரளா...' - IUML


திப்பு சுல்தான் மீது பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. குறிப்பாக அவர் பிரிவினைக்கானவர் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கர்நாடகாவிலும் திப்பு சுல்தான் ஜெயந்திக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுரேந்திரனின் பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லீக் பொது செயலாளர் பிகே குன்ஹாலிகுட்டி இதுகுறித்து பேசியதாவது,"இது கேரளா தானே... ஆம் இது கேரளா... எல்லோருக்கும் தெரியும் அல்லவா... இது நடக்கவே நடக்காது. அவர் ஜெயிக்கப்போவதும் இல்லை, பெயரை மாற்றப்போவதும் இல்லை" என்றார்.


படையெடுப்பில் மாற்றமடைந்த பெயர்


வயநாட்டில் இருக்கும் மூன்று முனிசபல் நகரங்களில் ஒன்று சுல்தான் பத்தேரி. இந்த பகுதி கணபதி வட்டம் என்றழைக்கப்பட்டதாக கேரளா சுற்றுலா (Kerala Tourism) இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயநகர பேரரசின் கீழ் அங்கு கட்டப்பட்ட கணபதி கோயிலை அடுத்து கணபதி வட்டம் என பெயர் இருந்துள்ளது. 


இங்கு 1700ஆம் ஆண்டு காலகட்டத்தில், மலபார் பகுதியில் திப்பு சுல்தான் மேற்கொண்ட படையெடுப்பில் பெயர் மாற்றப்பட்டது. தனது படை மற்றும் ஆயுதங்களின் கிடங்கை இந்த கணபதி வட்டத்தில் திப்பு சுல்தான் வைத்துள்ளார். இதனால், ஆங்கிலேயர்களின் காலத்தில் இது சுல்தான் பத்தேரி என் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. திப்பு சுல்தான் அங்கு ஒரு கோட்டையையும் கட்டி உள்ளார், அதுவும் தற்போது சிதிலமடைந்துள்ளது.


மேலும் படிக்க | அமேதியில் வினோத அமைதி: சவால் விடும் ஸ்மிரிதி இரானி.... சிந்திக்கும் ராகுல் காந்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ