இந்தியாவில் கொரோனா பரவல் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா (Coronavirus) உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால்  இதுவரை இல்லாத அளவாக இன்று 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 113 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரத்து 172 பேர் ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 85 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.


ALSO READ | கொரோனா 2வது அலை; ரயில் சேவைகள் நிறுத்தப்படுமா; ரயில்வே கூறுவது என்ன?


இந்நிலையில் தற்போது மத்திய அரசின் (Central Government) சுகாதார நல முயற்சிகளுக்கு உதவி செய்யும் வகையில் இந்திய ரயில்வே (Indian Railways) முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி மத்திய அரசின் சுகாதார நல முயற்சிகளுக்கு உதவி செய்யும் வகையில் இந்திய ரயில்வே நிர்வாகம் இதுவரை 5,601 ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான மையங்களாக மாற்றி உள்ளது. அவற்றில் 3,816 பெட்டிகள் பயன்படுத்த தயார் நிலையில் உள்ளன என தெரிவித்து உள்ளது.


மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்ட மிக குறைந்த அறிகுறிகளை கொண்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த ரயில் பெட்டி மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR