7 வது ஊதியக்குழு: 2 லட்சத்துக்கும் அதிகமான சம்பளம் கிடைக்கும் இந்தபடிப்புகளை படித்த அரசு ஊழியர்களுக்கு கோவா இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT கோவா) பல பதவிகளுக்கான காலியிடங்களுக்கு ஆட்கள் நிரப்படுகிறது. இந்த நல்ல வாய்ப்பை எப்படி யன்படுத்திக்கொள்வது மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7 வது ஊதியக்குழு: நீங்கள் அரசு வேலைக்குத் தயாராகி வருகிறீர்களா? இதோ உங்களுக்கு மாபெரும் வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. கோவா இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT கோவா) பல பதவிகளுக்கான காலியிடங்கள் காலியாக இருக்கின்றன. இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 


இந்த காலியிடங்கள் அனைத்தும் ஏழாவது ஊதியக்குழுவின் (7th pay commission) கீழ் நிரப்பப்படும்.  நிர்வாக மற்றும் தொழில்நுட்பத் துறை பணிகளுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஐ.ஐ.டி கோவா அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த காலியிடங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 


அதிகாரப்பூர்வ வலைதளம்:
ஐ.ஐ.டி கோவாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.iitgoa.ac.in வாயிலாக ஆன்லைனில் இந்த காலியிடங்களுக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2020 ஜூன் 30 ஆகும்.


மேலும் படிக்க: தொடர்ந்து 6-வது நாளாக 700-க்கு மேல் COVID-19 தொற்றுகளை பதிவு செய்த தமிழகம்...


வயது வரம்பு:
இந்த காலியிடங்களில் பதிவாளர் பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 55. இதைத் தவிர, இளநிலை கண்காணிப்பாளர் பணிக்கான அதிகபட்ச வயது 32 என்றும், இளம்நிலை உதவியாளர் பணிக்கான அதிகபட்ச வயது 37, உயர்நிலைப் பொறியாளர் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 50 ஆண்டுகள் மற்றும் தொழில்நுட்பக் கண்காணிப்பாளர் பணிக்கான அதிகபட்ச வயது 32 ஆண்டுகள்என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


காலியிட விவரம்:
பதிவாளர் - 1
இளநிலைக் கண்காணிப்பாளர் - 2
இளநிலை உதவியாளர் - 6
உயர்நிலைப் பொறியாளர் - 1
தொழில்நுட்பக் கண்காணிப்பாளர்-1


சம்பள விகிதம்:
பதிவாளர் - நிலை 14 (144200-218200)
இளநிலைக் கண்காணிப்பாளர் - நிலை 6 (35400 - 112400)
இளம்நிலை உதவியாளர் - நிலை 3 (21700 - 69100)
உயர்நிலைப் பொறியாளர் - நிலை 12 (78800-209200)
தொழில்நுட்ப கண்காணிப்பாளர் - நிலை 6 (35400 - 112400)


இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன:
பதிவாளர் – முதுகலை பட்டதாரி
இளம்நிலை கண்காணிப்பாளர் - பட்டதாரி
இளம்நிலை உதவியாளர் - பட்டதாரி
உயர்நிலைப் பொறியாளர் - சிவில் பொறியியல்பட்டம்
தொழில்நுட்பக் கண்காணிப்பாளர் - எம்.எஸ்.சி.


மேலும் படிக்க: கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் ஹோமியோபதி மருத்துவம்.. வெறும் 6 நாட்கள்..!!


விண்ணப்ப கட்டணம்:
குரூப் ஏ நிலையிலான பணிக்கு  விண்ணப்பித்தால் 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். குரூப் பி நிலையிலான பணிக்கு  200 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் மற்றும் குரூப் சிநிலையிலான பணிக்கு விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது


(மொழியாக்கம் -  மாலதி தமிழ்ச்செல்வன்)