புதுடெல்லி: கோவிட் தொற்றுநோயால், நாட்டில் பல விஷயங்கள் மாறிவிட்டன. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்கள் என பலவும் வீட்டில் இருந்தே இயங்கும் காலம் இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'வீட்டிலிருந்து வேலை' (Work From Home) என்ற போக்கு அதிகரித்து வரும் நிலையில், வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களுக்கு பல வகையான செலவுகள் அதிகரித்துள்ளன.


இணையம், தொலைபேசி, காஜெட்டுகள், மின்சாரக் கட்டணம் ஆகியவற்றில் இதன் மிகப்பெரிய தாக்கம் காணப்படுகிறது.


பெரிய நிவாரணம் கிடைக்கும் என்று நம்பிக்கை
கொரோனா தொற்றுநோய்க்கு முன், இதுபோன்ற செலவுகள் பற்றிய பதற்றம் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த பட்ஜெட்டில், 'வொர்க் ஃப்ரம் ஹோம்' செய்பவர்களுக்கு, பெரிய நிவாரணம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 


கடந்த சில ஆண்டுகளாக, யூனியன் பட்ஜெட்டில், சம்பளம் வாங்குபவர்களுக்கு, சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரத்தில் இந்த பட்ஜெட்டில் சம்பளம் வாங்கும் வேலை பார்ப்பவர்களுக்கு பல ஆதாயங்கள் கிடைக்கும்.  '


ALSO READ | Budget 2022: மாத சம்பளம் வாங்குவோரின் முக்கிய எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? 


டெலாய்ட் இந்தியா, வரி சேவைகள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம், வேலை செய்யும் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை வழங்க வேண்டும் என்று கோரியது. 


அரசால் நேரடியாக உதவித்தொகை வழங்க முடியாவிட்டால் வருமான வரியில் விலக்கு அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரப்படுகிறது. பிரிட்டனில் உள்ள வேலைக் கலாச்சாரத்தை சுட்டிக்காட்டும் டெலாய்ட், வீட்டில் இருந்து வேலை செய்வதன் நன்மைகளை பட்டியலிடுகிறது.  


ஐசிஏஐயும் இதே போன்ற பரிந்துரைகளை வழங்கியது
டெலாய்ட் இந்தியாவின் கோரிக்கையை நிதியமைச்சர் பரிசீலித்தால், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை வீட்டுப் படியாக வேலை கிடைக்கும். இதேபோல், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமும் (ICAI) பட்ஜெட் தொடர்பாக இதே போன்ற பரிந்துரைகளை செய்துள்ளது.


நிலையான விலக்கு அதிகரிக்கலாம்
வரி செலுத்துவோருக்கு நிலையான விலக்கில் சலுகை வழங்குவதற்கான வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும் ஐசிஏஐ கோரியுள்ளது. தற்போது, ​​வருமான வரியின் கீழ் நிலையான விலக்கு வரம்பு ரூ.50,000 ஆகும். இதை ரூ.1 லட்சமாக உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.


வருமான வரியின் 10வது பிரிவின் கீழ் வரி செலுத்துவோருக்கு சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விதி மிகவும் பழமையானது.


பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, 50 ஆயிரம் என்ற வரம்பு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, ஸ்டாண்டர்ட் டிஸ்கஷன் வரம்பை, 50 ஆயிரத்தில் இருந்து, ஒரு லட்ச ரூபாயாக உயர்த்த, கோரிக்கை விடுக்கப்படுகிறது.


ALSO READ | Budget 2022: பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுமா? எதிர்பார்ப்புகள் என்ன? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR