INDIA கூட்டணியில் இருந்து விலகிய காரணம்... ராகுல் காந்தி செய்த அந்த காரியம் - நிதிஷ் குமார் தடாலடி!
Bihar CM Nitish Kumar: இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய காரணம் குறித்தும், ராகுல் காந்தி மீதான அதிருப்தி குறித்தும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
Bihar CM Nitish Kumar: பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். தான் செய்யாத செயலுக்கு நல்ல பெயர் வாங்க முயற்சிப்பதாக ராகுல் காந்தி மீது நிதிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
"பீகாரில் நடந்த ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பெருமையை ராகுல் காந்தி எடுத்துக் கொள்கிறார். 9 கட்சிகளின் முன்னிலையில் கணக்கெடுப்பை நான் நடத்தினேன். 2019-2020ஆம் ஆண்டுகளில், சட்டசபை முதல் பொதுக்கூட்டம் வரை எல்லா இடங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பற்றி பேசினேன். அவர் போலியாக அதன் பெருமையை பெறுகிறார். நான் என்ன செய்வது? இருக்கட்டும்" என செய்தியாளர் சந்திப்பில் நிதிஷ் குமார் (Nitish Kumar) பேசியிருக்கிறார்.
இந்தியா கூட்டணி குறித்து...
இந்திய கூட்டணி (INDIA Alliance) குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், "கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என்று நான் அவர்களை வற்புறுத்தினேன். ஆனால் அவர்கள் ஏற்கனவே அதை இறுதி செய்துவிட்டனர். நான் கடுமையாக முயற்சித்தேன்.
மேலும் படிக்க | நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திரௌபதி முர்மு ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்
அவர்கள் ஒரு காரியத்தை கூட செய்யவில்லை. அதாவது எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்று இன்று வரை அவர்கள் செய்யவில்லை. அதனால்தான் அவர்களை விட்டுவிட்டு முதலில் யாருடன் இருந்தேனோ அவர்களிடமே திரும்பி வந்தேன். பீகார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்" என்றார்.
ராகுல் காந்தி கடும் தாக்கு
முன்னதாக, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து கடந்த ஜன. 28ஆம் தேதி அன்று நிதிஷ் குமார் பிரிந்தார். தொடர்ந்து, ஆளுநரை சந்தித்த அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார். மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து நிதிஷ் குமார் 9ஆவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
அவர் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பின்னர் ராகுல் காந்தி (Rahul Gandhi), நிதிஷ் குமார் மீது கடுமையாக சாடினார். குறிப்பாக, ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு நிதிஷ் குமார் எதிலேயோ சிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்ததால், எதிர்க்கட்சியில் இருந்து வெளியேறினார் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.
"காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளமும் ஜாதிவாரி கணக்கெடுப்பு (Caste Based Census) நடத்தப்படுவதை உறுதி செய்த பிறகு, நிதீஷ் குமார் சிக்கிக் கொண்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாஜக அவருக்கு ஒரு வழியை வழங்கியது" என்று பீகாரின் பூர்னியாவில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி பேசியிருந்தார். மக்களவைத் தேர்தலுக்கு ஆதரவைத் திரட்டும் காங்கிரஸின் கடைசி முயற்சியான பாரத் ஜோடோ நீதி யாத்திரைக்காக ராகுல் காந்தி இப்போது பீகாரில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ