ஆந்திராவின் ஆளுநராக பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் நியமனம்!
பாஜக-வின் மூத்த தலைவர் பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்!
பாஜக-வின் மூத்த தலைவர் பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்!
சத்தீஸ்கர் ஆளுநராக அனுசுயா யுகேயையும், ஆந்திராவின் ஆளுநராக பிஸ்வா பூசன் ஹரிச்சந்தனையும் நியமித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைரவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., "இந்திய குடியரசுத் தலைவர் பின்வரும் நியமனங்கள் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்: சத்தீஸ்கர் ஆளுநராக அனுசுயா யுகே, ஆந்திராவின் ஆளுநராக பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். மேற்கண்ட நியமனங்கள் அந்தந்த அலுவலகங்களுக்கு பொறுப்பேற்கும் தேதிகளிலிருந்து நடைமுறைக்கு வரும்," என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் 1971-ஆம் ஆண்டு பாரதிய ஜன சங்கத்தில் இணைந்தவர். 1977-ல் ஜனதா கட்சி உருவாகும் வரை அதன் தேசிய நிர்வாக உறுப்பினராகவும், அதன் மாநில பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். பின்னல் 1975-ல் MISA -ன் கீழ் தடுக்கப்பட்ட அவர் பாஜகவில் சேர்ந்தார், 1980 முதல் 1988 வரை அதன் மாநிலத் தலைவராக இருந்தார்.
1988-ல் ஜனதா கட்சியில் சேர்ந்த அவர் மாநிலத்திற்கான அதன் துணைத் தலைவரானார். பின்னர் மீண்டும் ஏப்ரல் 1996-ல் பாஜகவில் இணைந்தார்.
84 வயதான அரசியல்வாதி சிலிக்கா மற்றும் புவனேஸ்வர் தொகுதிகளில் இருந்து ஐந்து முறை ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.