பொதுவாக நாம் எங்கேயாவது வெளியில் செல்லும்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் 5 ரூபாய் கொடுத்து கட்டண கழிப்பறையை பயன்படுத்தி இருப்போம் அல்லது  பொது கழிப்பறையை இலவசமாகவே பயன்படுத்த இருப்போம். ஆனால் இங்கு கழிப்பறையால் ஒரு கலவரமே நடந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் ஹைதராபாத்தில் டிரை ஃப்ரூட்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் தனது  மகன் மற்றும் மனைவியுடன் கடந்த 15 ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து தனது சொந்த ஊரான மத்திய பிரதேசத்தில் உள்ள சிங்கராளி என்ற இடத்துக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக அவர் ஹைதராபாத்தில் இருந்து போபால் ரயில் நிலையத்துக்கு வந்து சிங்ராலி செல்லும் ரயிலுக்காக காத்திருந்தார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அவருக்கு கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய அவசர சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த இந்தூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி அந்த கழிப்பறையை பயன்படுத்தி உள்ளார். அவர் கழிப்பறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது தான் ரயில் கிளம்பியது தெரிய வந்துள்ளது. பின்னர் செய்வதறியாது திகைத்த அவர் வந்தே பாரத் ரயிலின் கதவை நோக்கி வந்துள்ளார். 



ரயில் கிளம்பும் போது வந்தே பாரத் ரயிலின் கதவுகள் பூட்டப்பட்டிருக்கும். அதனால் அப்துல் காதரால் எதுவும் செய்ய முடியவில்லை பின்னர் அந்த ரயிலில் இருந்த 3 டிக்கெட் பரிசோதர்களிடமும், நான்கு போலீசாரிடமும் இது பற்றி தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களோ வந்தே பாரத் ரயிலின் கதவுகளை டிரைவரை அணுகினால் மட்டுமே திறக்க முடியும் என்று கூறி உள்ளனர். பின்னர் அவர் டிரைவரை அணுக முயன்ற போது போலீசாரால்  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்


மேலும் படிக்க | தக்காளி திருட்டு... 400 கிலோ தக்காளியை காணோம் என விவசாயி போலீஸில் புகார்!


இறுதியாக டிக்கெட் இல்லாமல் வந்தே பாரத் ரயிலில் பயணித்ததற்காக அப்துலுக்கு 1020 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் உஜ்ஜினியில் ரயில் நின்றதும் இறங்கிய அவர் மறுபடியும் பஸ்ஸில் போபால் வருவதற்கு 720 ரூபாய் செலவழித்துள்ளார். அப்துல் ரயிலில் சிக்கிக் கொண்டதால் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். இதன் காரணமாக சிங்ராலி செல்லும் தக்ஷின் எக்ஸ்பிரஸில் ஏற வேண்டாம் என முடிவு செய்தனர். இதனால் அந்த ரயிலில் ஏற்கனவே முன்பதிவு முன்பதிவு செய்வதற்காக பயன்படுத்திய 4000 ரூபாய் வீணாய் போனது. வந்தே பாரத் ரயிலின் கழிவறையை ஒரு முறை பயன்படுத்திவிட்டு அப்துல் காதர் கிட்டத்தட்ட 6 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார்


இந்த சம்பவத்தை சுட்டி காட்டி அப்துல் காதர் வந்தே பாரத் ரயிலில் அவசரகால அமைப்பு இல்லாததால் தான் மன உளைச்சலை சந்தித்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள ரயில்வே அதிகாரி ஒருவர் வந்தே பாரத் ரயில் புறப்பட துவங்கும் முன் ரயிலின் கதவுகள் பூட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்படும். கதவை பூட்டிய பின் தான் ரயில் பயணிக்க துவங்கும். பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது மேலும் உயர் அதிகாரியிடம் இருந்து உத்தரவு பெற்ற பின்னரே கதவுகளை திறக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்


இந்த விவகாரம் சோசியல் மீடியாக்களில் வைரலானதை அடுத்து பலரும் மிகவும் விலை உயர்ந்த கழிப்பிடம் வந்தே பாரத் ரயிலின் கழிப்பிடம் தான் போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | மணிப்பூர் விவகாரத்தில் மேலும 3 பேர் கைது! சிக்கியது எப்படி..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ