லுங்கிகள் - நைட்டிகளுக்கு தடை... குடியிருப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த RWA!
`குடியிருப்பு வளாகத்தில் நடப்பதற்கான ஆடைக் குறியீடு` என்ற தலைப்பில் நோட்டீஸ் ஒன்றை கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஃபை-2 இல் உள்ள ஹிம்சாகர் சொசைட்டியின் குடியிருப்பளர் நல சங்கம் (RWA ) வெளியிட்டது.
நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு வீட்டு குடியிருப்போர் நல சங்கம் (RWA) அதன் குடியிருப்பாளர்களை பொதுவான பகுதிகள் மற்றும் பூங்காகளில் வலம் வரும் போதும், நடக்கும் போதும், தங்கள் உடை விஷயத்தில் கவனமாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. ஜூன் 10 தேதியிட்ட சுற்றறிக்கை, ஹிம்சாகர் அபார்ட்மெண்ட் AOA குடியிருப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது, அது உடனேயே சமூக ஊடகங்களில் வைரலானது. குடியிருப்பாளர்கள் "லுங்கிகள் மற்றும் நைட்டிகள்" அணிந்து தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று நோட்டீஸில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நோட்டீசு மக்களின் தனிப்பட்ட விருப்பங்களை மதிக்காத செயல் என ஆன்லைனில் விமர்சனத்தைப் பெற்றது.
"குடியிருப்பின் வளாகத்தில் நடப்பதற்கான ஆடைக் குறியீடு" என்ற தலைப்பில் அறிவிப்பு கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஃபை-2 பகுதியில் உள்ள ஹிம்சாகர் சொசைட்டியின் RWA தன இந்த அறிக்கையை வெளியிடப்பட்டது.
அதில், "நீங்கள் குடியிருப்பில் எந்த நேரத்திலும் சுற்றித் திரிந்தாலும், உங்கள் நடத்தை மற்றும் உடையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், எனவே உங்கள் ஆட்சேபிக்க தகுந்த உடை அணிந்ததன் காரணமாக விமர்சன் செய்ய ஒருவருக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்பது உங்கள் அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அனைவரும் வீட்டு உடைகளான லுங்கி, நைட்டி அணிந்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
மேலும் படிக்க | டிவி சீரியலால் வந்த வினை... மனைவியை துபாக்கியினால் சுட்ட கணவன்!
"இது குடியிருப்பு எடுத்த நல்ல முடிவு, இதை அனைவரும் மதிக்க வேண்டும், எதிர்க்க எதுவும் இல்லை, பெண்கள் நைட்டி அணிந்து வரும் போது, அது ஆண்களுக்கு சங்கடத்தை உண்டு செய்கின்றன. ஆண்கள் லுங்கி அணிந்தால் பெண்களுக்கும் அசௌகரியமாக இருக்கும். ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்" என்று RWA தலைவர் CK கல்ரா ANI இடம் கூறினார்.
இந்த அறிவிப்பு கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த நடவடிக்கைக்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், சிலர் விமர்சித்துள்ளனர். ஒரு பயனர் எழுதினார், "பொது இடங்களில் நடப்பதற்கு நைட்டி மற்றும் லுங்கிகள் சற்று பொருத்தமற்றவை தான். அதனால் சில டிரஸ்ஸிங் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்." ஆனால், வேறு சிலர் "RWA ஒரு கட்ட பஞ்சாயத்து போல் செயல்படுவதற்கான மற்றொரு நிகழ்வு" என்று கூறினார்.
மேலும் படிக்க | ’#செருப்பு_பிஞ்சுறும்_420மலை’ டிவிட்டரில் டிரெண்ட் செய்த அதிமுக - காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ