மக்களை ஓட்டு வங்கிகளாக பயன்படுத்தும் காங்கிரஸ்: மோடி தாக்கு!!
காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் கட்சிகள் ஏழை மக்களை ஏமாற்றி, வாக்கு வங்கியாக பயன்படுத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றம்சாட்டி இருக்கிறார்!!
காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் கட்சிகள் ஏழை மக்களை ஏமாற்றி, வாக்கு வங்கியாக பயன்படுத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றம்சாட்டி இருக்கிறார்!!
இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரட்சாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று ஒடிஸா மாநிலத்தின் கலாஹன்டியில் பிரசாரம் செய்து வருகிறார். இதை தொடர்ந்து, பிரட்சாரத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியும், ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியும் ஏழைகளை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றன என அவர் தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின் மாநிலத்தில் 3000 கிராமங்களில் 24 லட்சம் வீடுகள் முதன்முறையாக இலவச மின் இணைப்பை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். இது போன்ற சாதனைகளை நிகழ்த்தியது தான் அல்ல என்று கூறிய பிரதமர், இந்திய வாக்காளர்களே அந்த சாதனைகளை நிகழ்த்தியதாகவும் தான் வெறும் சேவகன் மட்டுமே என்றும் தெரிவித்தார்.
ஒடிசாவில் மாநில அரசிடம் இருந்து எந்த வித ஒத்துழைப்பு இல்லாத மக்களுக்கு உதவ சிறப்பான நடவடிக்கைகளை தமது அரசு எடுத்துள்ளதாக மோடி குறிப்பிட்டார். காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் கட்சிகள் ஏழைகளை, ஏழைகளாகவே வைத்திருப்பதாக சாடினார். ஏழை மக்களை ஏமாற்றி வருவதுடன், அவர்களை வாக்கு வங்கியாக இந்த கட்சிகள் பயன்படுத்துவதமாக பிரதமர் குற்றம்சாட்டினார்.