மும்பை: 2019 ல் நடைபெற உள்ள மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் (Maharashtra Assembly Elections 2019) தொகுதி பகிர்வு மற்றும் கூட்டணி தொடர்பாக பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தகவல் வட்டாரங்களின்படி, மாநிலத்தின் உள்ள மொத்தம் 288 சட்டமன்ற இடங்களில் 120-125 தொகுதிகளில் சிவசேனா (Shiv Sena) போட்டியிட ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இருப்பினும், இதுகுறித்து முறையாக எந்தவித செய்தியும் அறிவிக்கப்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நாள் வரை பாஜக (BJP) கூட்டணியில் இருக்கும் சிவசேனா சட்டசபை தேர்தலில் பாதிக்கு பாதி (50-50) சூத்திரத்தை நிபந்தனையாக வைத்து வந்தது. மேலும் பாஜகவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, 288 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆர்வமுள்ள வேட்பாளர்களின் நேர்காணல்களையும் சிவசேனா தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் (Devendra Fadnavis) நாக்பூர் தொகுதியிலும் தனது கட்சி வேட்பாளர்களுடன் நேர்காணல்களை நடத்தினர். 


அதேபோல 288 இடங்களுக்கும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பாஜகவும் ஈடுபட்டது. இதனால் இரண்டு கட்சிகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இருப்பினும், மோதலுக்குப் பிறகு, சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான கூட்டணி குறித்து பேச்சு எழுந்தது. தற்போது தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சுவாரத்தை மூலம் சிவசேனா 120-125 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த செய்தி உறுதியானால் 155-165 இடங்களுக்கு பாஜக வேட்பாளர்களை நிறுத்த முடியும். மீதமுள்ள தொகுதிகளில் என்.டி.ஏவின் சிறிய கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படுவதற்க்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த தொகுதி பங்கீடு இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி செய்யப்படலாம் எனத் தெரிகிறது.


மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் (Amit Shah) பொதுக்கூட்டத்தில் பலமுறை கூறியுள்ளனர். புதிய அரசாங்கத்தின் முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தான் இருப்பார் எனவும் கூறப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் அக்டோபர் 21 நடைபெறும். அக்டோபர் 24 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.